உலகம்

லொஸ் ஏஞ்சல்ஸில் கடலில் குளிக்க தடை

லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி சுகாதார அதிகாரிகள், கடலில் இறங்குவதற்கு அல்லது குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர்.

கடலில் காணப்படும் பாக்டீரியா காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் பியர் ( Venice Pier) , சாண்டா மோனிகா பியர் (Santa Monica Pier),  மெரினா டெல் ரேயில் (Marina del Rey) உள்ள மதர்ஸ் பீச் (Mother’s Beach) மற்றும் சான் பெட்ரோவில் உள்ள இன்னர் கப்ரில்லோ பீச் ( Inner Cabrillo Beach ) ஆகிய இடங்கள் பாதிக்கப்பட்ட  பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய நீர் மாதிரிகளில், கலிபோர்னியா சுகாதாரத் தரநிலைகளை மீறிய பாக்டீரியா அளவுகள் இருப்பது தெரியவந்துள்ளது.

இது, நீருக்குள் இறங்குபவர்களுக்கு நோய் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

தற்போது நிலவும் வெப்பமான வானிலை காரணமாக பெரும்பாலான மக்கள் கடற்பகுதிகளை நாடுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்