இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு நிச்சயம் இயற்றப்படும்: நீதி அமைச்சர் உறுதி

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனை தொடர்பில் தமது கட்சியின் உறுப்பினர் லால் விஜேநாயக்க மாறுபட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும், இறுதியில் அவர் கட்சியின் பொது நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நீதி அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

“எமது அரசாங்கத்திற்குள் உள்ளவர்களுக்கு இடையே வெவ்வேறான கருத்துகள் இருந்தாலும், இறுதியில் அனைவரும் பொதுவான ஒரு நிலைப்பாட்டையே ஏற்போம். இதுவே உண்மையான ஜனநாயகப் பண்பாடாகும். இதற்கு முன்னரும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

எனவே, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிப்பது தொடர்பில் லால் விஜேநாயக்கவிடம் மாறுபட்ட கருத்து நிலைப்பாடு இருக்கலாம். இருப்பினும், இறுதியில் அவர் பொதுவான நிலைப்பாட்டிற்குத் தலைவணங்குவார் என நான் முழுமையாக நம்புகின்றேன்.

புதிய அரசமைப்பு மறுசீரமைப்பு என்பது ஒரு நீண்டகால பொறிமுறையாகும். அதனை நாம் நிச்சயம் முன்னெடுப்போம். அதற்கு முன்னதாக, மிக முக்கியமான சில  மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்,” என்று நீதி அமைச்சர் தெரிவித்தார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை