மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் "தேசத்துரோகிகள்" என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா செய்தி விளையாட்டு

ஈரானிய வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியாவில் புதிய வாழ்வு: குடியுரிமை சான்றிதழ் பெற்று நெகிழ்ச்சி

  • August 6, 2026
  • 0 Comments

மகளிர் ஆசியக் கோப்பை (AFC Women’s Asian Cup) தொடரின் போது போராட்டத்தில் ஈடுபட்டதற்காகத் தங்கள் சொந்த அரசாங்கத்தால் “தேசத்துரோகிகள்” என முத்திரை குத்தப்பட்ட ஈரான் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு கால்பந்து வீராங்கனைகள் தற்போது ஆஸ்திரேலியக் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஈரானிய தேசியக் கீதத்தைப் பாட மறுத்ததன் மூலம் பாத்திமா பசந்தீதே (Fatemeh Pasandideh – 22) மற்றும் அதீபே ரம்சானிசாதே (Atefeh Ramezanisadeh – 34) ஆகிய இரு வீராங்கனைகளும் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றனர். […]

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா செய்தி

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 10 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை

  • August 6, 2026
  • 0 Comments

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதை அடுத்து, 10 மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதும் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. நேற்றும் பல பகுதிகளில் மழை நீடித்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய தென் மாவட்டங்கள் கனமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் தண்ணீர் தேங்கியதாலும், தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதாலும் மக்களின் […]

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். உலகம் செய்தி

மியான்மர் இராணுவ ஆட்சியாளர் தாய்லாந்து விஜயம்

  • August 6, 2026
  • 0 Comments

மியான்மரின் இராணுவப் ஆட்சியாளர் மின் ஆங் ஹ்லேங்க் (Min Aung Hlaing) தாய்லாந்திற்குவிஜயம் மேற்கொண்டுள்ளார். 2021-ஆம் ஆண்டில் ஆங் சாங் சூச்சியின் (Aung San Suu Kyi) தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்த்து அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் தாய்லாந்து செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நாட்டில் உள்நாட்டுப் போரை மூட்டியது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்ததுடன், நாட்டின் பொருளாதாரமும் கடுமையாகப் சீரழிந்தது. 2017-ஆம் ஆண்டில் ரோஹிங்கிய முஸ்லிம்கள் பெருமளவில் வெளியேற்றப்பட்டதில் தொடர்புடையவர் என்பதால் ஏற்கனவே […]

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். செய்தி விளையாட்டு

திட்டத்தை கைவிட்டு மன்னிப்பு கோரினார் FIFA தலைவர்

  • August 6, 2026
  • 0 Comments

தனியார் முதலீட்டாளர்களுக்குப் போட்டிகளின் பங்குகளை விற்கும் சர்ச்சைக்குரிய திட்டத்தில் தான் செய்த தவறுகளுக்காக FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ மன்னிப்பு கோரியுள்ளார். இருப்பினும், மொராக்கோவில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அதிகாரிகளின் பெற்றதால் அவரின் தலைமைப் பதவிக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. FIFA தலைவராக அவரே நீடிப்பார். தான் கொண்டு வந்த திட்டம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து எழுந்த பலத்த விமர்சனங்களை அடுத்து, புதன்கிழமை மொராக்கோவின் ரபாத் நகரில் உள்ள FIFA வின் ஆப்பிரிக்க அலுவலகத்திற்கு நிர்வாகக் குழு உறுப்பினர்களை […]

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். ஐரோப்பா செய்தி

ஆஸ்திரியாவிலும் தீவிரமடையும் வெப்ப அலை

  • August 6, 2026
  • 0 Comments

மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவில் தீவிரமடைந்து வரும் வெப்ப அலை மற்றும் வறட்சி காரணமாக ஆஸ்திரியாவில் இதுவரை இல்லாத அளவிலான அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதேவேளை ஹங்கேரியில் மக்கள் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டுள்ளனர். உலகின் மிக வேகமாக வெப்பமடைந்து வரும் கண்டமான ஐரோப்பா, இந்த கோடைகாலம் முழுவதும் சாதனை அளவிலான வெப்பத்தாலும் அழிவுகரமான காட்டுத்தீகளாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த சில வாரங்களில் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தன. தற்போது […]

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ரமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். செய்தி விளையாட்டு

வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க: ஈட்டி எறிதலில் உலகின் முதன்மை வீரர்

  • August 6, 2026
  • 0 Comments

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் தரவரிசையில் 1,354 புள்ளிகளுடன், இலங்கையின் ருமேஷ் தரங்க (Rumesh Tharanga) உலக அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் கிளாஸ்கோ (Glasgow) நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் (Commonwealth Games) தங்கம் வென்றதன் மூலம் அவர் இந்த முதலிடத்தைப் பிடித்துள்ளார். இதன் மூலம், ஆண்களுக்கான ஈட்டி எறிதல் உலகத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கை தடகள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைருமேஷ் தரங்க படைத்துள்ளார்.

உலகம்

தனிமனித தரவுகளை உளவு பார்த்து விற்பனை செய்யும் சீனாவின் மென்பொருள் – 13 நாடுகளில் புலக்கம்

  • August 6, 2026
  • 0 Comments

சீனாவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் உளவு மென்பொருள் கருவி, 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதாகவும், அக்கருவி விரிவான கண்காணிப்பு தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது என்றும் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஆர்டிக் வுல்ஃப் நெட்வொர்க்ஸ் இன்க், ( Arctic Wolf Networks Inc) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. லைட்ஸ்பை (LightSpy) எனப்படும் ஒரு தீங்கிழைக்கும் மென்பொருள் தளம் கண்டறியப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது. குறித்த கருவியானது   தனிப்பட்ட தகவல்களான மிகத் துல்லியமான […]

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

குளவிக் கொட்டு: திருகோணமலையில் 30 மாணவர்கள் பாதிப்பு

  • August 6, 2026
  • 0 Comments

திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. இலங்கை செய்தி

விமல், உதய கம்மன்பில உள்ளிட்ட 6 பேர் மீது நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு

  • August 6, 2026
  • 0 Comments

முன்னாள் அமைச்சர்கள் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் சர்வஜன பலய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட ஆறு பேர் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தடுத்து வைக்கப்பட்டுள்ள, முன்னாள் அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் சுரேஷ் சாலே குறித்து அறிக்கைகள் வெளியிட்டதன் மூலம், இவர்கள் நீதிமன்றை அவமதித்துள்ளதாக நீதிவான் குறிப்பிட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த விரிவான அறிக்கையைப் பரிசீலித்த […]

இலங்கை

காற்று மாசுப்பாட்டால் ஆண்டுதோறும் 7000 அகால மரணங்கள் பதிவு

  • August 6, 2026
  • 0 Comments

காற்று மாசுப்பாட்டின் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 7000 அகால மரணங்கள் பதிவாகுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் தொழில்சார் சுகாதாரப் பிரிவு இயக்குநர் டாக்டர் சந்தனி விதானா நேற்று இந்த தகவலை வெளியிட்டார். உலகளவில் ஆண்டுதோறும் சுமார் 07 தொடக்கம் 08 மில்லியன் மக்கள் காற்று மாசுப்பாட்டின் காரணமாக உயிரிழப்பதாக தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், காற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் துகள்கள் சுவாசப் பாதை வழியாக […]