தனிமனித தரவுகளை உளவு பார்த்து விற்பனை செய்யும் சீனாவின் மென்பொருள் – 13 நாடுகளில் புலக்கம்
சீனாவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் உளவு மென்பொருள் கருவி, 13-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்பாட்டில் உள்ளதாகவும், அக்கருவி விரிவான கண்காணிப்பு தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது என்றும் பாதுகாப்பு நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
சைபர் பாதுகாப்பு நிறுவனமான ஆர்டிக் வுல்ஃப் நெட்வொர்க்ஸ் இன்க், ( Arctic Wolf Networks Inc) வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
லைட்ஸ்பை (LightSpy) எனப்படும் ஒரு தீங்கிழைக்கும் மென்பொருள் தளம் கண்டறியப்பட்டுள்ளதாக அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த கருவியானது தனிப்பட்ட தகவல்களான மிகத் துல்லியமான இருப்பிடத் தரவு, ஒலிப்பதிவுகள், அரட்டைப் பதிவுகள், கேமரா மற்றும் வீடியோ, திரைப்பதிவுகள் மற்றும் பலவற்றைத் திருடுவதாகவும், அவற்றை விற்பனை செய்ய பெருமளவு பணத்தை பெறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் ஒருவரின் தனிப்பட்ட சாதனத்தை முழுவதுமாக அழிக்கும் திறனையும் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்தத் தளத்தில் விலை நிலைகள், கட்டண உள்கட்டமைப்பு மற்றும் பிராண்டிங் ஆகியவை உள்ளன என்றும், இந்தக் கருவியில், வாங்க விரும்புவோருக்கான ஒரு செயல்விளக்கச் சூழலும் உள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்தக் கருவி “சீன தேசிய அரசுகளுடன் தொடர்புடையது” என்றும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.




