குளவிக் கொட்டு: திருகோணமலையில் 30 மாணவர்கள் பாதிப்பு
திருகோணமலை, மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் 30 மாணவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இச்சம்பவம் இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.




