மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன் கார் குண்டு வெடிப்பு
மெக்சிகோவில் பொலிஸ் நிலையத்திற்கு முன் கார் குண்டு வெடித்ததில் ஆறு பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
போதைப்பொருள் கடத்தலுக்கான முக்கிய வழித்தடங்களைக் கொண்ட மாநிலமான சகாடெகாஸில் Zacatecas உள்ள ஓஜோகாலியென்டே Ojocaliente நகரில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தனியார் வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்தே வெடிகுண்டு இவ்வாறு வெடித்துச் சிதறியுள்ளது.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஜகாடெகாஸ் போதைப்பொருள் வர்த்தகத்திற்கு முக்கியமான வழித்தடம் ஆகும். இது மத்திய மெக்சிகோவை நாட்டின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளுடன் இணைக்கிறது.
மேலும், அமெரிக்காவிற்கு கொக்கைன் மற்றும் பிற போதைப்பொருட்களைக் கடத்துவதற்கான முக்கிய வழித்தடங்களையும் இது கொண்டுள்ளது.




