இலங்கை செய்தி

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை ஆஜரான நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய லொத்தர் சபையின் சிறப்புத் திட்டத்திற்கமைய வேலைக்கு அமர்த்தப்பட்ட ஊழியர்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி அரசிற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகளுக்கு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு ரவி கருணாநாயக்கவிற்கு ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் வருகை தராததன் காரணமாக கடந்த சனிக்கிழமை ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

எனினும் அவர் வீட்டில் இருக்கவில்லை என்பதுடன் தனிப்பட்ட காரணங்களினால் ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்க வேறு ஒரு திகதியை வழங்குமாறு தனது சட்டத்தரணிக்ள ஊடாக ரவி கருணாநாயக்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை