இலங்கை செய்தி

விஜித ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவா தொடரில் பங்கேற்பு

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வுகளில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை குழு, கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில், மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் சிஇலங்கை குறித்த எழுத்துப்பூர்வமான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார்.

கொழும்பிலிருந்து செல்லும் தொழில்நுட்பக் குழு மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பணியகத்துடன் இணைந்து, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முந்தைய ஐ.நா. தீர்மானங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து அனைத்துலக சமூகத்திற்கு விளக்கமளிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகம் பகிர்ந்திருந்த, இலங்கை குறித்த முன்கூட்டிய எழுத்துப்பூர்வ அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதிலளித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை