உலகம்

பிரேசிலில் கோர விபத்து – 23 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் இன்று பேருந்தொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது   23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், லொறி ஓட்டுனரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். லொறி எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தை தொடர்ந்து BR-373 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஐரோப்பா

நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்பு – 02ஆவது சந்தேகநபர் கைது

  • August 19, 2026
  • 0 Comments

நார்ட் ஸ்ட்ரீம் குழாய் வெடிப்புடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேகநபர் குரோஷியாவில் கைது செய்யப்பட்டு ஜெர்மனியிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டின் வழக்குறைஞர்கள் இன்று அறிவித்தனர். இது தொடர்பில் ஜெர்மனியின் கூட்டாட்சி வழக்குறைஞர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இரண்டாவது சந்தேகநபரை விளாடிமிர் இசட். என்று மட்டுமே அடையாளம் காட்டப்பட்டுள்ளது. அத்துடன்  ஐரோப்பிய பிடியாணை உத்தரவின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நார்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் 2 எரிவாயுக் குழாய்களைக் குறிவைத்து வெடிபொருட்களைப் பொருத்திய, செர்ஹி கே. […]

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு - 583 எலும்புக் கூடுகள் மீட்பு இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: 3ஆம் கட்ட அகழ்வுப் பணி நிறைவு – 583 எலும்புக் கூடுகள் மீட்பு

  • August 19, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்றுடன் நிறைவடைந்தன. இன்றைய அகழ்வின் போது ஒரு எலும்புக்கூடு புதிதாக அடையாளம் காணப்பட்டது. மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 56 வது நாளான இன்று 10 எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை 583 ஆக அதிகரித்துள்ளது .அவை அனைத்தும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. மூன்றாவது கட்ட அகழ்விற்கு அனுமதிக்கப்பட்ட […]

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு

  • August 19, 2026
  • 0 Comments

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன. குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் […]

இலங்கை

முன்னெச்சரிக்கை – அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே நிலவும்

  • August 19, 2026
  • 0 Comments

நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே  நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 04.00 மணி முதல் நாளை முழுநாளும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் நீரிழப்பைத் தடுக்கப் போதுமான அளவு தண்ணீர் […]

உலகம்

ICC நீதிமன்ற அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை – ஆதரவாக களமிறங்கிய ஐரோப்பிய ஒன்றியம்

  • August 19, 2026
  • 0 Comments

காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளை விசாரிக்கும் உயர் அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்போவதாக அமெரிக்க நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் ஐசிசி நீதிமன்றத்திற்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளனர். “உலகின் மிகக் கொடூரமான சில குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உதவுகிறது,” என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். “இந்த அத்தியாவசியப் பணியைச் செய்வதற்கு, அதன் நீதிபதிகளும் அதிகாரிகளும் சுதந்திரமாகவும் வெளிப்புற அழுத்தமின்றியும் செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும்,” என்றும் அவர்கள் […]

ஐரோப்பா

பிரான்ஸில் வெப்ப அலையால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுதல் இறப்புகள் பதிவு

  • August 19, 2026
  • 0 Comments

பிரான்ஸில் கடந்த ஜுலை மாதம் நிலவிய வெப்ப அலை காரணமாக 1,243 கூடுதல் இறப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் இன்று இந்த தகவலை அறிவித்தது. ஜுலை 3 முதல் ஜூலை 22 வரையிலான காலகட்டத்தில், இந்த இறப்புகள் பதிவாகியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆண்டை தாக்கிய கோடைக்கால வெப்ப அலைக் காரணமாக பிரான்ஸில் சுமார் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகம்

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

  • August 19, 2026
  • 0 Comments

கென்யாவின் சம்புரு மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 07 விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விமானம் லோயிசாபா வனப்பாதுகாப்புப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருவதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது . இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய […]

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். உலகம் செய்தி

ஈராக்கில் களமிறங்கினார் ஈரான் சபாநாயகர்: பின்னணி என்ன?

  • August 19, 2026
  • 0 Comments

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஈராக் அதிகாரிகளையும், ஈரானின் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டணியின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் போராளிக் குழுக்கள், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரக இலக்குகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையான உறவைப் பேண முயலும் பாக்தாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் […]