உலகம் செய்தி

ஈராக்கில் களமிறங்கினார் ஈரான் சபாநாயகர்: பின்னணி என்ன?

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார்.

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் ஈராக் அதிகாரிகளையும், ஈரானின் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டணியின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் போராளிக் குழுக்கள், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரக இலக்குகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

இதனால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையான உறவைப் பேண முயலும் பாக்தாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

அதேவேளை, கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதியை (Ali al-Zaidi) வெள்ளை மாளிகையில் சந்தித்து அவருக்குப் பாராட்டு தெரிவித்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஈரான் சபாநாயகர், ஈராக் சென்றுள்ளார்.

இதற்கிடையில், இந்த வார தொடக்கத்தில் ஈரானில் இருந்து பிரான்ஸ் தூதர்கள் வெளியேற்றப்பட்டதற்குப் பதிலடியாக, இரண்டு ஈரானிய தூதர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்போவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி