இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா உலகம் செய்தி

தொண்டு நிறுவன ஊழியர் படுகொலை: நீதி வழங்க மறுக்கும் இஸ்ரேல் – ஆஸ்திரேலியா போர்க்கொடி

  • August 20, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் (IDF) தாக்குதலில் உயிரிழந்த ஆஸ்திரேலிய நிவாரணப் பணியாளர் சோமி பிராங்க்ளினின் (Zomi Frankcom) மரணத்திற்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடரப்போவதில்லை என்ற இஸ்ரேலிய அரசின் முடிவுக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2024 ஏப்ரல் மாதம் காசாவில் ‘வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்’ (WCK) அமைப்பின் சார்பில் நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த சோமி பிராங்க்ளின் உட்பட 7 ஊழியர்கள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் […]

இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். இலங்கை செய்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு

  • August 20, 2026
  • 0 Comments

2026 தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று (20) முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் 48 மதிப்பீட்டு மையங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். 380 மதிப்பீட்டு குழுக்களின் கீழ் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் முன்னெடுக்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதியளவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இம்முறை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையானது கடந்த […]

உலகம்

ஈரானுடனான வர்த்தக உறவுகளை துண்டித்த ஐக்கிய அரபு அமீரகம்

  • August 19, 2026
  • 0 Comments

ஈரான் மற்றொரு தாக்குதலை நடத்தியதாகக் குற்றம் சாட்டி, ஐக்கிய அரபு அமீரகம் ஈரானுடனான அனைத்து வர்த்தகத்தையும் உடனடியாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்கத் தடைகள் மற்றும் பல்வேறு முற்றுகைகளால் ஏற்கனவே கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஈரான், ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த முடிவால் சர்வதேச அளவில் மேலும் தனிமைப்படுத்தப்படும் என்று வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஈரானிடமிருந்து தாக்குதல் அபாயம் இருப்பதாக எச்சரித்து, ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு […]

உலகம்

கிம்மை சந்திக்கும் ட்ரம்ப்

  • August 19, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை இந்த ஆண்டு சந்திப்பதாக அறிவித்துள்ளார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கு இன்று பதிலளித்த அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.    

கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி

தேனிலவுக்கு சென்ற பிரித்தானிய தம்பதி விமான விபத்தில் பலி

  • August 19, 2026
  • 0 Comments

கிரீஸில் இடம்பெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த புதுமணத் தம்பதி பிரித்தானியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் க்ரோமி (Alexander Cromie) மற்றும் மேரி எபர்ட் (Marie Ebert) என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஏதென்ஸ் நகருக்கு அருகிலிருந்து பிரபல சுற்றுலாத் தீவுக்குச் செல்வதற்காக இவர்கள் தனியாருக்குச் சொந்தமான ‘பெல் 206’ (Bell 206) ரக ஹெலிகாப்டரை வாடகைக்கு அமர்த்தியதாகக் கருதப்படுகிறது. உயிரிழந்த க்ரோமி, பிரபல ‘பிளாக்ஸ்டோன்’ (Blackstone) நிதி நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றி வந்தார். இவரது மறைவுக்கு பிளாக்ஸ்டோன் நிறுவனம் ஆழ்ந்த […]

உலகம்

ஆப்பிரிக்கா தங்கச் சுரங்க விபத்து – பலி எண்ணிக்கை உயர்வு

  • August 19, 2026
  • 0 Comments

ஆப்பிரிக்காவில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100 ஐ எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்கக் குடியரசின் கேமரூன் எல்லையருகே உள்ள ஜாம்போயே சுரங்கப் பகுதியில் நேற்று மாலை நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தின்படி நூறு பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுவதுடன், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானின் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உறுதி அளித்துள்ளதாக அரச ஊடகமான IRNA தெரிவித்துள்ளது. செய்தி

பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதில் ஈரான் தீவிரம்

  • August 19, 2026
  • 0 Comments

ஈரானின் ஆயுதப் படைகளுக்கான ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) உறுதி அளித்துள்ளதாக அரச ஊடகமான IRNA தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி பெசெஷ்கியான், நாட்டின் பாதுகாப்புத் திறனை வலுப்படுத்தவும், ஆயுதப் படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் தனது அரசாங்கம் சாத்தியமான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் எனக் குறிப்பிட்டார். இலக்கை எ எட்டுவதற்கு நாட்டின் அனைத்து நிர்வாக அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

ஐரோப்பா

போர் அச்சம் – வங்கியில் இருந்து பணத்தை மீளப் பெறும் ரஷ்ய மக்கள்

  • August 19, 2026
  • 0 Comments

ரஷ்ய மக்கள் வங்கிகளில் வைப்பிட்டுள்ள பணத்தை மீளப் பெற்றுவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில்,   சுமார் €24.4 பில்லியன் தொகையைத் மக்கள் திரும்பப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. போருக்கு நிதியளிப்பதற்காக கிரெம்ளின் தனியார் வைப்புத்தொகைகளை முடக்கவோ அல்லது தேசியமயமாக்கவோ கூடும் என்ற அச்சம் பரவியதால் மக்கள் இவ்வாறு பணத்தை மீளப் பெற்று வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. Banks.ru நிதிச் சந்தையின் தரவுகளின்படி, பணத்திற்கான தேவை மார்ச் மாத தொடக்கத்தில் உயரத் தொடங்கி, தொடர்ந்து அதிகரித்து வருவதாக […]

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட முடிவு இலங்கை செய்தி

வடக்கு மாகாண அபிவிருத்திக்காக ஒன்றிணைந்து செயல்பட முடிவு

  • August 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமென வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விடுத்த கோரிக்கைக்கு, மாகாணத்தின் நிறைவேற்று அதிகாரிகளும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரும் இணங்கினர். வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடக்கு மாகாண ஆளுநர் தலைமையிலான அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (19.08.2026) புதன்கிழமை மாலை ஆளுநர் […]

உலகம்

பிரேசிலில் கோர விபத்து – 23 பேர் பலி

  • August 19, 2026
  • 0 Comments

பிரேசிலின் தெற்கு மாநிலமான பரானாவில் இன்று பேருந்தொன்று லொறியொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குறைந்தது   23 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பேருந்தில் இருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், லொறி ஓட்டுனரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தினர். லொறி எதிர் திசைப் பாதைக்குள் நுழைந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தை தொடர்ந்து BR-373 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.