வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா
இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது .
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்களும், இலங்கை அணி 284 ரன்களும் எடுத்தன.
தொடர்ந்து 178 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 193 ரன்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 372 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் 2-வது இன்னிங்ஸில் இலங்கை அணி 206 ரன்களுக்கு சுருண்டதால் இந்தியா 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணியின் இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் மானவ் சுதர் 2-வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை (6/55) வீழ்த்தி மிரட்டினார். இப்போட்டி முழுவதும் அபாரமாக பந்துவீசிய அவர் மொத்தம் 10 விக்கெட்டுகளைக் (4/76 & 6/55) கைப்பற்றி இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




