உலகம்

கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து – சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

  • August 19, 2026
  • 0 Comments

கென்யாவின் சம்புரு மாவட்டத்தில் இன்று ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 07 விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விமானம் லோயிசாபா வனப்பாதுகாப்புப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த சுற்றுலாப் பயணிகள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. உள்ளூர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்து வருவதாகவும், விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. செய்தி விளையாட்டு

வரலாற்று வெற்றியை பதிவு செய்தது இந்தியா

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய அணிகளுக் கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 165 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி தனது 600-வது சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடிய நிலையில், இந்த வரலாற்று முக்கியத்துவமிக்க வெற்றி கிடைக்கப்பெற்றுள்ளது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச மைதானத்தில் இலங்கையை சுருட்டி வீழ்த்தி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது . இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய […]

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். உலகம் செய்தி

ஈராக்கில் களமிறங்கினார் ஈரான் சபாநாயகர்: பின்னணி என்ன?

  • August 19, 2026
  • 0 Comments

ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அண்டை நாடான ஈராக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ஈராக் அதிகாரிகளையும், ஈரானின் ஆதரவு பெற்ற அரசியல் கூட்டணியின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். ஈரானின் ஆதரவு பெற்ற ஈராக் போராளிக் குழுக்கள், நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் உள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் தூதரக இலக்குகளைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதனால், வாஷிங்டன் மற்றும் தெஹ்ரான் ஆகிய இரு நாடுகளுடனும் சமநிலையான உறவைப் பேண முயலும் பாக்தாத் அரசாங்கத்திற்கு அழுத்தம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் அனைத்து வாகன தண்டப் பணங்களையும் ஒன்லைன் மூலம் செலுத்த ஏற்பாடு

  • August 19, 2026
  • 0 Comments

அரசாங்கத்தின் டிஜிட்டல் பரிமாற்ற செயலாக்கத்திற்கு வலுவான பங்களிப்பை வழங்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப சேவையை நாடளாவிய சேவையாக நிறுவுவதில் கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக அறிவுறுத்தல் வழங்கினார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19) நடைபெற்ற டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் 2026 ஆம் ஆண்டிற்கான திட்டங்கள் மற்றும் வேலைத்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார். 2030 ஆம் ஆண்டளவில் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தை 30 பில்லியன் டொலர்களாக […]

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு இலங்கை செய்தி

வடக்கு மாகாண புதிய பொலிஸ்மா அதிபர் கடமையேற்பு

  • August 19, 2026
  • 0 Comments

வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக தினேஸ் கருணாநாயக்க இன்று (19) புதன்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார். காங்கேசன்துறையில் உள்ள வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் காரியாலயத்தில் நடைபெற்ற சம்பிரதாயபூர்வ சர்வமத வழிபாடுகளுடன் தினேஸ் கருணாநாயக்க தனது கடமைகளை பொறுப்பேற்றார். வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிய எச்.பி.சிறிவர்தன, தென் மாகாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், விசேட பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றி வந்த […]

ஐரோப்பா

லண்டனில் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் பாரிய தீ விபத்து

  • August 19, 2026
  • 0 Comments

தென்கிழக்கு லண்டனின் டெப்ட்ஃபோர்டில் Deptford கழிவுகள் கொட்டப்பட்டுள்ள இடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் 100 தீயணைப்பு வீரர்களும் 15 தீயணைப்பு வாகனங்களும் தீயை அணைக்க போராடி வருகின்றனர். லேண்ட்மேன் வேயில் Landmann Way உள்ள ஒரு மறுசுழற்சி நிலையத்தில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புக் குழுவினர், தீயை அணைப்பதற்காக உயரமான சுழலும் ஏணிகளை நீர் கோபுரங்களாகப் பயன்படுத்தினர். இதனால் அந்த நிலையம் கடுமையாகச் சேதமடைந்தது. அதிகப்படியான புகை காரணமாக, அப்பகுதி மக்கள் தங்கள் […]

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கையில் அடுத்த மாதம் முதல் பயணிகள் ட்ரோன் சேவை ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் EHang நிறுவனத்தினால் இந்த ட்ரோன் சேவை செயற்படுத்தப்படவுள்ளதாக பிரதியமைச்சர் ருவன் கொடித்துவக்கு தெரிவித்தார். முதல் கட்டத்தின் கீழ் கொழும்பில் இருந்து தெற்கு கடற்கரை பிரதேசத்திலுள்ள இடங்கள் வரையிலும் கட்டுநாயக்கவில் இருந்து துறைமுக நகரம் வரையிலும் ட்ரோன் சேவை முன்னெடுக்கப்படுமென அவர் கூறினார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், அவசர அனர்த்த சேவைகளுக்காக பயன்படுத்துதல் மற்றும் கடல்சார் […]

இலங்கை

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

  • August 19, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நேரடி விமானங்களை வழங்கும் குறைந்த கட்டண விமான நிறுவனமான வியட்ஜெட் ஏர்லைன்ஸ், இலங்கைக்கான தனது முதல் விமானச் சேவையைத் தொடங்கியுள்ளது. இதன் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், விமானி மற்றும் துணை விமானி இருவரும் இலங்கையர்கள் ஆவர். வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முதல் விமானமான VJ-1875, 169 பயணிகளுடன் நேற்று (18) இரவு 9.33 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்தடைந்தது. பின்னர், அந்த விமானம் 171 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வியட்நாமின் […]

ஐரோப்பா

ஈரானுக்கு பதிலடி – தூதர்களை வெளியேற்றும் பிரான்ஸ்

  • August 19, 2026
  • 0 Comments

தெஹ்ரானில் இருந்து இரண்டு பிரெஞ்சு தூதர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு பதிலடியாக பிரான்ஸில் இருந்து இரு ஈரானிய தூதர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட் , இந்த சகிக்க முடியாத செயலுக்கு விளைவுகள் இருக்கும் என்று நான் அறிவித்திருந்தேன். அதன்படியே நடந்துள்ளது. பிரான்சில் உள்ள இரண்டு ஈரானிய தூதர்கள் மிக விரைவில் வெளியேற்றப்படுவார்கள்,”  எனத் தெரிவித்துள்ளார். கடந்த மாதம், தெஹ்ரானில் உள்ள ஈரானிய பாதுகாப்பு சேவைகளால் […]

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். உலகம் செய்தி

கனடாமீதான 50 சதவீத வரியை இடைநிறுத்தினார் ட்ரம்ப்

  • August 19, 2026
  • 0 Comments

கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பொருட்கள் மீது விதிக்கப்படவிருந்த 50 சதவீத வரியை இடைநிறுத்தம் செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். இந்த தடைகள் அமுலுக்கு வர சில மணி நேரங்களே இருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே கடைசி நேரத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, மேலதிகப் பேச்சுவார்த்தைகளுக்கான கால அவகாசத்தை […]