இலங்கை செய்தி

வடக்கு, கிழக்கு எம்.பிக்களுடன் சஜித் அவசர சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விரிவாகக் கவனத்தில் கொள்ளப்பட்டன.

குறிப்பாக, இம்மாகாண மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் சமூக, பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் பிராந்திய மட்டப் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சித் தலைவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகளை நாடாமன்றத்தில் பரந்தளவில் முன்வைப்பது மற்றும் அவற்றுக்கான அவசியமான அரசியல் மற்றும் சமூகத் தலையீடுகளைச் செய்வது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் எம்.எல்.எம். ஹிஸ்புல்லா, எம்.எஸ்.ஏ. வாஸீத், எம்.டி.எம். தாஹிர், துறைராசா ரவிகரன், இம்ரான் மஹ்ரூப், எம்.எஸ். உதுமாலெப்பை, ரவூப் ஹக்கீம், வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், காதர் மஸ்தான், செல்வம் அடைக்கலநாதன், சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன் உள்ளிட்ட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை