இலங்கை

முன்னெச்சரிக்கை – அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே நிலவும்

நாட்டின் அடுத்த சில நாட்களுக்கு கடும் வெப்பநிலையே  நிலவும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது இன்று மாலை 04.00 மணி முதல் நாளை முழுநாளும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும், வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பகுதி மக்கள் நீரிழப்பைத் தடுக்கப் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், சூரியனின் கடும் வெப்பத்திலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்