ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. செய்தி பொழுதுபோக்கு

நாய்க்கு ராக்கி கயிறு: சர்ச்சையில் சிக்கிய நடிகை

  • August 26, 2026
  • 0 Comments

ரக்சா பந்தன் (ரக்ஹி) பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ள நடிகையின் உடைக்கு எதிராக இணையத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த விளம்பரத்தைப் பிரபல இந்திய ஆபரண நிறுவனம் திரும்பப் பெற்றுள்ளது. பிரபல பாலிவுட் நடிகை கிருதி சனோன் (Kriti Sanon) நடித்துள்ள இந்த விளம்பரத்தில், சகோதரர்களின் மணிக்கட்டில் சகோதரிகள் ராக்கி கயிறு கட்டும் இந்து பண்டிகைக் கொண்டாட்டம் சித்திரிக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் கிருதி சனோன் அரைகுறை ஆடையுடன் (Cropped top and skirt) நடித்திருப்பதாகக் கூறி, […]

உலகம்

தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவி விலகல் – ஓராண்டுக்குள் நடந்தது என்ன?

  • August 26, 2026
  • 0 Comments

தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டுக்குள் இராஜினாமா செய்துள்ளார். மேலும் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன் Samia Suluhu Hassan அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் துணை ஜனாதிபதி இம்மானுவேல் ஜான் நிசிம்பி Emmanuel John Nchimbi , செப்டம்பர் 4 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிசிம்பி முன்னதாக ஜனாதிபதியின் ஆளும் கட்சியான சாமா சா மாபிந்துசி , Chama cha Mapinduzi  […]

Rice இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்க அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் ஈரானுக்கான இந்திய அரிசி ஏற்றுமதி

  • August 26, 2026
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் குறித்த அச்சுறுத்தல்கள் எழுந்தபோதிலும் ஈரானுக்கான தனது அரிசி ஏற்றுமதி பாதிக்கப்படாது என நம்பிக்கை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டில், ஈரான் – இந்தியா இடையிலான 1.25 பில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த வர்த்தகத்தில் அரிசி ஏற்றுமதி மட்டுமே சுமார் மூன்றில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளது. மேலும், இந்தியாவின் மொத்த சர்வதேச அரிசி ஏற்றுமதியில் (11.5 பில்லியன் டாலர்) ஈரான் 7 […]

ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டு சம்பவம் – இரண்டாவது சந்தேக நபர் கைது

  • August 26, 2026
  • 0 Comments

சுவீடனில் கடந்த வாரம் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரண்டாவது நபர், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரை முறையாக காவலில் வைக்க நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இரண்டாவது சந்தேக நபர், தாக்குதல் நடத்தியவருக்கு […]

அபுதாபியின் 'மினா சயீத்' (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியா செய்தி

அபுதாபியில் தவித்த 7 இந்திய மாலுமிகள் மீட்பு: ஏனையோரை மீட்க நடவடிக்கை

  • August 26, 2026
  • 0 Comments

அபுதாபியின் ‘மினா சயீத்’ (Mina Zayed) துறைமுகத்தில் MV Sea Star 2 என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் கடந்த 11 மாதங்களாகச் சிக்கித் தவித்த 7 இந்திய மாலுமிகள் தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். எஞ்சியுள்ள மாலுமிகளையும் விரைவாக மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள இந்தியத் தூதரகம், “சீ ஸ்டார் 2 கப்பலில் சிக்கியுள்ள இந்திய மாலுமிகளின் நலன் மற்றும் அவர்களை விரைவில் தாயகம் அனுப்புவது தொடர்பாக உள்ளூர் […]

ஐரோப்பா

ரஷ்யாவின்  அமூர் இரசாய வளாகத்தில் தீ விபத்து – 06 சீனர்கள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

ரஷ்யாவின்  அமூர் பகுதியில் உள்ள எரிவாயு இரசாயன வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 06 சீன பிரஜைகள் உள்ளிட்ட 07 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 152 பேர் காயங்களுக்கு சிகிச்சை பெற்றுள்ளதுடன், அவர்களில் 36 பேர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல அவசர விமான சேவை ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.      

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

“22” ஆவது திருத்தச்சட்டமூலத்தை மக்கள் தோற்கடிப்பார்கள்: கூட்டு எதிரணி

  • August 26, 2026
  • 0 Comments

அரசியலமைப்பின் 22-ஆவது திருத்தச் சட்டமூலமானது ஜனநாயகத்திற்கும், சர்வாதிகாரத்திற்கும் இடையிலான சமராகும். இச்சமரில் சர்வாதிகாரத்தைத் தோற்கடித்து, மக்கள் ஜனநாயகத்தைப் பாதுகாப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “22-ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அப்படி நடத்தப்பட்டால் மக்கள் நிச்சயம் அதனைத் தோற்கடிப்பார்கள். மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு இந்த அரசாங்கம் திட்டமிடவில்லை. ஏனெனில், தேர்தலை நடத்தினால் நிச்சயம் தோல்வியடைவோம் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். குறிப்பாக, […]

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இலங்கை செய்தி

மனைவி குத்திக் கொலை: கணவன் கைது: தலைமன்னாரில் பயங்கரம்

  • August 26, 2026
  • 0 Comments

கணவனின் கத்திக்குத்திற்கு இலக்காகி மனைவி உயிரிழந்த கொடூர சம்பவமொன்று தலைமன்னாரில் இன்று புதன்கிழமை (26) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கணவனின் கத்தி குத்துக்கு இலக்காகிய மனைவி தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தாய் ஆவார். தாக்குதலில் உயிரிழந்த பெண்ணின் கணவர் தலைமன்னார் பகுதியில் வைத்து தலைமன்னார் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் தலைமன்னார் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு உலகம் செய்தி மத்திய கிழக்கு முக்கிய செய்திகள்

சிரிய இராணுவத்துடன் இணைவு: குர்திஷ் தலைமையிலான SDF படை கலைப்பு

  • August 26, 2026
  • 0 Comments

சிரியாவின் புதிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா (Ahmed al-Sharaa) தலைமையிலான அரசாங்கத்துடன் எட்டப்பட்ட ஒருங்கிணைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, குர்திஷ் தலைமையிலான ‘சிரிய ஜனநாயகப் படைகள்’ (SDF) கலைக்கப்படுவதாக அதன் தலைவர் மஸ்லூம் அப்தி (Mazloum Abdi) அறிவித்துள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎல் (ISIS) பயங்கரவாத அமைப்பிற்கு எதிரான போரில் முன்னின்று செயல்பட்ட SDF அமைப்பு, சிரிய இராணுவத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டு விட்டதாக டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதிமாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அப்தி உறுதிப்படுத்தினார். சிரியாவின் வடகிழக்கு […]

At least 15 newborns killed in Pakistan hospital fire உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பாகிஸ்தான் வைத்தியசாலையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

  • August 26, 2026
  • 0 Comments

இஸ்லாமாபாத்திலுள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் வார்டில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் குறைந்தது 15 பிறந்த குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சம்பவம் நடந்த போது பிம்ஸ் (PIMS) மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் (nursery) 16 குழந்தைகள் இருந்ததாக மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள் காட்டி Geo News புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தை மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பராமரிப்புப் பிரிவில் இருந்த ஏர் Air […]