நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். இலங்கை செய்தி

ஏழை மக்களின் நிதியை கொள்ளையடித்த பெண் அதிகாரிகளுக்கு விளக்கமறியல்

  • August 26, 2026
  • 0 Comments

நோர்வூட் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அஸ்வசும நிதி மோடிச தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண் அதிகாரிகளையும், எதிர்வரும் செப்டம்பர் 08 ஆம் திகதிவரை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் பீட்டர் போல் நேற்று (25) உத்தரவிட்டுள்ளார். நோர்வூட் பிரதேச செயலகத்தின் அஸ்வசும பிரிவுக்குப் பொறுப்பாக செயற்பட்ட ஹட்டன்-டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 31 வயது பெண்ணொருவரும், ஹட்டன்-டிக்கோயா காபெக்ஸ் கிராமத்தை சேர்ந்த 32 வயதான பெண்ணொருவருமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் […]

'செஸ்' உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இந்தியா செய்தி விளையாட்டு

உலக சாம்பியனை வீழ்த்திய 15 வயது இந்திய சிறுவன்

  • August 26, 2026
  • 0 Comments

‘செஸ்’ உலகின் ஐந்து முறை உலக சாம்பியனான நோர்வேயின் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவின் 15 வயது சிறுவன் வந்தன் அலங்கார் சவாய் Vandan Alankar Sawai, 50 நகர்த்தல்களில் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். Chess.com இணையதளம் நடத்திய Titled Tuesday தொடரின் இரண்டாவது சுற்றில் இப்போட்டி நடைபெற்றது. வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய வந்தன் (தரவரிசை: 2,288), உலகின் முன்னணி வீரரான கார்ல்சனை (தரவரிசை: 2,823) எதிர்கொண்டார். இப்போட்டி குறித்துப் பேசிய வந்தன், “இழப்பதற்கு எதுவுமில்லை, […]

புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உலகம் செய்தி பொழுதுபோக்கு

பாடலால் உலகை வென்ற Dolly Parton மறைந்தார்: சோகத்தில் இசையுலகம்

  • August 26, 2026
  • 0 Comments

புகழ்பெற்ற அமெரிக்கக் கன்ட்ரி இசைப் பாடகியும், பாடலாசிரியரும், நடிகையுமான டாலி பார்ட்டன் (Dolly Parton) தனது 80-ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மறைவிற்கான காரணம் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அவர் நாஷ்வில்லில் (Nashville) அமைதியான முறையில் உயிரிழந்துள்ளார் என அவரது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் “புற்றுநோயுடன் குறுகிய காலம் போராடி இறந்தார்” என்று அவரது பிரதிநிதிகளை மேற்கோள் காட்டி  People இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தென்மாநில […]

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஹோமுஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாகத் தன் அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. உலகம் செய்தி மத்திய கிழக்கு

ஹோர்முஸ் நீரிணை நிர்வகிப்பு: ஈரான், ஓமான் பேச்சு

  • August 26, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையை நிர்வகிப்பது தொடர்பாகத் தன் அண்டை நாடான ஓமானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் போர் தொடங்குவதற்கு முன்னர் வரை, உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) போக்குவரத்தைக் கையாண்ட இந்த முக்கிய கடல்வழிப் பாதையில், கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஈரானும் ஓமானும் கடந்த சில வாரங்களாகத் தொடர்ச்சியற்ற […]

மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தல் இழுத்தடிப்பு: ஆளுங்கட்சி கூறுவது என்ன?

  • August 26, 2026
  • 0 Comments

மாகாணசபைத் தேர்தலை நடத்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் தீர்மானம் அல்ல என்றும், அதனை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: “மாகாணசபைத் தேர்தலை இயலுமானவரை விரைவில் நடத்த வேண்டும் என்பதே […]

உலகம்

அமெரிக்காவின் வரி விதிப்பிற்கு நிகரான வரி விதிப்பு – கனடா அறிவிப்பு

  • August 25, 2026
  • 0 Comments

கனடாவின் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளமைக்கு பதிலடியாக வொஷிங்டனுக்கு எதிரான வர்த்தக வரிகளை ஒட்டாவா இன்று அறிவித்துள்ளது. வொஷிங்டன் விதித்துள்ள அதே மதிப்பிலான புதிய வரிகளுக்கு ஈடாக கனடாவும் வரி விதித்துள்ளது. இதற்கமைய வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி முதல், அமெரிக்க எஃகு மற்றும் அலுமினியத்தின் மீதான வரியை 50 சதவீதமாக இரட்டிப்பாக்கவும், C$27.6 பில்லியனுக்கும் (US$19.94 பில்லியன்) அதிகமான மதிப்புள்ள அமெரிக்கப் பொருட்களுக்கு 15 முதல் 50 சதவீதம் வரை வரி விதிக்கவும் […]

ஐரோப்பா

UKவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – £1,400 இழக்க வாய்ப்பு

  • August 25, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் வேலை மற்றும் ஓய்வூதியத் துறை (DWP) ஓய்வூதியக் கடன் மறுஆய்வுப் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. 2031 ஆம் ஆண்டுக்குள் நலத்திட்டச் செலவினங்களில் இருந்து £370 மில்லியனைச் சேமிக்கும் முயற்சியில், தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளை இலக்காகக் கொண்டு இந்த பிரச்சாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 95,000 முதல் 100,000 வரையிலான ஓய்வூதியதாரர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்படலாம் என்றும், சுமார் 10,700 பயனாளிகள் இந்த ஆண்டு சராசரியாக £1,400 பவுண்ட்ஸை  இழக்க நேரிடும் என்றும் தெரியவந்துள்ளது. பயனாளிகள் தங்கள் சொத்துக்களைக் குறைவாகக் குறிப்பிடுவது அல்லது […]

உலகம்

ஈரான் மீதான பொருளாதாரத் தடை – அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

  • August 25, 2026
  • 0 Comments

ஈரானுக்கு  எதிராக அமெரிக்கா விதித்துள்ள புதிய பொருளாதாரத் தடைகளை சீனா கண்டித்துள்ளது. அத்துடன் இந்தத் தண்டனை நடவடிக்கைகள் பதட்டங்களைத் தீவிரப்படுத்தி, பிற பாதிப்பு அபாயங்களை உருவாக்கும் என்றும் எச்சரித்துள்ளது. ஈரானுடனான தனது ஒத்துழைப்பு சர்வதேச சட்டத்திற்கு இணங்குகிறது என்று கூறிய பெய்ஜிங், தனது நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதற்கிடையே இந்தத் தடைகளுக்கு தெஹ்ரான் முழுமையாகத் தயாராக உள்ளது என்றும், எதிரிகள் ஒரு தாக்குதலை எதிர்பார்க்க வேண்டும் என்றும் ஈரான் நிதியமைச்சர் அலி […]

ஐரோப்பா

பெல்ஜியத்தில் அச்சுறுத்தலாக மாறியுள்ள துப்பாக்கி கலாச்சாரம் – காப்பாற்ற வருமாறு அழைப்பு

  • August 25, 2026
  • 0 Comments

பெல்ஜியத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக  துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பிரஸ்ஸல்ஸ் ரயில் நிலையத்தில் நேற்று இரவும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து மேயர் ஜீன் ஸ்பினெட்  Jean Spinette யாராவது வந்து எங்களை காப்பாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். “மூன்று ஆண்டுகளாக நான் கூடுதல் படையினரைக் கேட்டு வருகிறேன்,” என்றும்  அவர் கூறினார். 2026-ல் பரந்த பிரஸ்ஸல்ஸ் […]

4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு செய்தி விளையாட்டு

4 ஆண்டுகால தடைக்கு எதிராக முன்னாள் விம்பிள்டன் சாம்பியன் மேன்முறையீடு

  • August 25, 2026
  • 0 Comments

முன்னாள் விம்பிள்டன் சாம்பியனான மார்க்கெட்டா வோண்ட்ரௌசோவா (Marketa Vondrousova), ஊக்கமருந்து பரிசோதனையைத் தவறவிட்டதற்காகத் தனக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைக்கு எதிராக விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் நீதிமன்றத்தில் (CAS) மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுப் பெறப்பட்டதை உறுதிசெய்துள்ள CAS அமைப்பு, இதற்கான விசாரணைத் திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளது. இந்தத் தடையின்படி செக் குடியரசைச் சேர்ந்த 27 வயதான வோண்ட்ரௌசோவா, வரும் 2030 ஜூன் 21 ஆம் திகதி வரை விளையாட முடியாது. கடந்த […]