உலகம்

தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவி விலகல் – ஓராண்டுக்குள் நடந்தது என்ன?

தான்சானியாவின் துணை ஜனாதிபதி பதவியேற்று ஓராண்டுக்குள் இராஜினாமா செய்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹசன் Samia Suluhu Hassan அந்த ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வரும் துணை ஜனாதிபதி இம்மானுவேல் ஜான் நிசிம்பி Emmanuel John Nchimbi , செப்டம்பர் 4 ஆம் திகதியுடன் பதவியில் இருந்து விலகுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிசிம்பி முன்னதாக ஜனாதிபதியின் ஆளும் கட்சியான சாமா சா மாபிந்துசி , Chama cha Mapinduzi  (CCM)-யின் பொதுச் செயலாளராக இருந்தார்.

கடந்த மாதம் ஒரு உரிமைக் குழு நடத்திய நிகழ்வில், புதிய அரசியலமைப்புக்காகப் போராடுமாறு அவர் கூறிய கருத்துக்கள் ஆளும் கட்சியினர் இடையே பெறும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

அந்த கருத்துக்கள் தேவையற்றவை என உட்கட்சி உறுப்பினர்கள் குறிப்பிட்டத்தை தொடர்ந்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தெரியவருகிறது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்