ஐரோப்பா

சுவீடன் வாள்வெட்டு சம்பவம் – இரண்டாவது சந்தேக நபர் கைது

சுவீடனில் கடந்த வாரம் பாடசாலையில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்வீடன் அரசு வழக்கறிஞர்கள் இன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

இரண்டாவது நபர், கொலைக்கு உடந்தையாக இருந்ததாகவும், கொலை முயற்சிக்கு உடந்தையாக இருந்ததாகவும் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரை முறையாக காவலில் வைக்க நீதிமன்றத்தை நாடுவதா இல்லையா என்பது குறித்து வியாழக்கிழமை முடிவு எடுக்கப்படும் என்று அரசுத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

இரண்டாவது சந்தேக நபர், தாக்குதல் நடத்தியவருக்கு எவ்வாறு உதவினார் என்பதை அந்த அமைப்பு குறிப்பிடவில்லை.

மத்திய ஸ்வீடன் நகரமான ஃபாகர்ஸ்டாவில் உள்ள பிரினெல் உயர்நிலைப் பாடசாலையில் வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றது.

இதில் 17 வயதுடைய மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்