இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது. 2020 ஆம் […]

ஐரோப்பா

ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை மீட்கும் பாதையில் ஹங்கேரி

  • August 24, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் 10 பில்லியன் யூரோ நிதியை பெற தேவையான அனைத்து நிபந்தனைகளையும் ஹங்கேரி நிறைவேற்றும் பாதையில் உள்ளதாக யூரோநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹங்கேரியின் புதிய பிரதமரான பீட்டர் மாக்யார் Péter Magyar ஐரோப்பிய ஒன்றியத்தால் முடக்கப்பட்ட நிதியை பெற போராடி வருகின்ற நிலையில் அதற்கான காலக்கெடு ஆகஸ்ட் மாத இறுதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் அந்த நிதியை பெற பீட்டர் மாக்யார் Péter Magyar  தலைமையிலான அரசாங்கம் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்யும் பாதையில் உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. €16.4 […]

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார். ‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணை-தலைமேற்று நடத்திய தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர், “உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதப் பிரசாரத்தை […]

ஐரோப்பா

பிரான்ஸ் பாடசாலைகளில் கைப்பேசிகளை தடை செய்யும் சட்டமூலம் – தீவிர முனைப்பில் அரசாங்கம்

  • August 24, 2026
  • 0 Comments

புதிய கல்வியாண்டு தொடங்கும் முதல், நாடு முழுவதும் உள்ள அனைத்து உயர்நிலைப் பாடசாலைகளிலும் கைப்பேசி தடை செய்யப்படும் என பிரான்ஸ் அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இதற்கான சட்டத்தை இயற்ற  ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் உறுதிப்பூண்டுள்ளதாக அரசாங்க செய்தித் தொடர்பாளர் மௌட் ப்ரேஜியன் Maud Bregeon  இன்று தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், உயர்நிலைப் பாடசாலைகளில் கைபேசிகளுக்கான தடை அரசியலமைப்பு சபையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே சரிபார்க்கப்பட்ட வழிமுறைகளை ஒரு நிலையான சட்டக் கட்டமைப்பிற்குள் செயல்படுத்துவதற்காக, […]

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: செப்.22 இல் வழக்கு தீர்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த சதித் திட்டம் தீட்டியமை மற்றும் அதற்குத் உடந்தையாக இருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் 25 பிரதிவாதிகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் தீர்ப்பு செப்டம்பர் 22 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு விசேட மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது. மூன்று மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வினால் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையிலேயே இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் – […]

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை செய்தி

இலங்கையில் முக்கிய பரீட்சைகளுக்குரிய திகதிகள் அறிவிப்பு

  • August 24, 2026
  • 0 Comments

2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள முக்கிய பாடசாலைப் பொதுப் பரீட்சைகளுக்கான திகதிகளை இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையை 2027 ஓகஸ்ட் 01ஆம் திகதி நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. க.பொ.த. உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் 03 முதல் 2027 ஓகஸ்ட் 28 வரை நடைபெறும். பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையை 2027 டிசம்பர் […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் தங்க நகைகளுக்கு குறி – ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்யும் கள்வர்கள்

  • August 24, 2026
  • 0 Comments

ஐரோப்பாவில் கலைப் பொருட்கள் மற்றும் தங்க நகைகளை திருடும் கள்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சமீபகாலங்களில் பெரும்பாலான இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்செயல்களுக்காக திருடர்கள் ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை, இந்த மாற்றங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று யூரோபோல் கூறியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், கலைப்பொருள் திருடர்கள் அதிக லாபம் தரும் விலைமதிப்புள்ள […]

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு இலங்கை செய்தி

கொழும்பு கோட்டை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி: திட்டம் குறித்து ஆராய்வு

  • August 24, 2026
  • 0 Comments

உலக வங்கியின் கடன் மற்றும் நிதி உதவியின் கீழ் செயல்படுத்தப்படும் கொழும்பு கோட்டையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் மற்றும் இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் ஆகியவை தொடர்பாக, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உலக வங்கியின் முகாமையாளர் Gevorg Sargsyan உட்பட தூதுக்குழுவினருக்கும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (24) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கொழும்பு கோட்டையின் வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன், சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் […]

இலங்கை

எல் நினோவால் மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ வானிலையால் எதிர்காலத்தில் மின்சாரத் தேவை அதிகரிக்கக்கூடும் என்றும், நீர் ஆதாரங்கள் வற்றுவதால் மின்சார உற்பத்தி குறையக்கூடும் என்றும் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில், மின்சாரப் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் திரு. கே. பி. எல். சந்திரலால் தெரிவித்துள்ளார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களை அடிப்படையாகக் கொண்ட மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான விலைகள் குறித்து இன்று உரையாற்றியபோது அவர் இவ்வாறு […]

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. இந்தியா செய்தி

உலகளவில் வைரலான உணவுப் பாதுகாப்பு ஆணையாளரின் அதிரடி வேட்டை

  • August 24, 2026
  • 0 Comments

உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன. மகாராஷ்டிராவின் உணவுப் பாதுகாப்புத் தலைவராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை அவர் நடத்தியுள்ளார். இதன் அடிப்படையில் டொமினோஸ் (Domino’s), பிட்சா ஹட் (Pizza Hut) மற்றும் மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) போன்ற சர்வதேச உணவகக் கிளைகள், புகழ்பெற்ற […]