கூகுள் கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் தீக்குளித்த நபரால் பரபரப்பு
லோயர் மன்ஹாட்டனில் உள்ள கூகுள் அலுவலகங்கள் அமைந்துள்ள கட்டிடத்தின் வரவேற்பறைக்குள் நபர் ஒருவர் தனக்கு தானே தீவைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே இவ்வாறு தீவைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு ஊழியர்கள் தீயணைப்பான்களைப் பயன்படுத்தி தீயை அணைத்துள்ளனர். தற்போது அவர் நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது,
அதேநேரம் காயங்களுக்கு சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




