அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு

  • August 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் கடும் விசா கெடுபிடி: இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் சரிவு அமெரிக்காவில் குடியேற்றக் கொள்கைகள் குறித்த கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக CNBC செய்தி வெளியிட்டுள்ளது. Common App அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் தயாரித்துள்ள இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு, விண்ணப்பங்களில் கடும் சரிவு 2026-27 கல்வியாண்டிற்கான இளங்கலை சேர்க்கைக்கான ஒட்டுமொத்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், சர்வதேச மாணவர்களின் விண்ணப்பங்கள் […]

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா உலகம் செய்தி

மோடியின் அழைப்பை புடினிடம் கையளித்தார் ஜெய்சங்கர்

  • August 25, 2026
  • 0 Comments

ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய பதற்றங்கள், உலகளாவிய சவால்கள் மற்றும் பலதரப்பு விவகாரங்கள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்புக்குப் பிறகு ‘X’ பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கர், “ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் விரிவான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருதரப்பு ஒத்துழைப்பு, பிராந்திய சவால்கள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார். […]

ஐரோப்பா

300000 வீரர்களை திரட்டும் புட்டின் – உக்ரைனின் எஞ்சிய பகுதியை கைப்பற்ற தீவிர முயற்சி

  • August 25, 2026
  • 0 Comments

இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரஷ்யா மேலும் 300,000 துருப்புக்களைத் அணித் திரட்டக்கூடும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். கிழக்கு உக்ரைனில் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்த மொஸ்கோ முயற்சிப்பதால் புதிய வீரர்களை திரட்ட திட்டமிட்டு வருவதாக தெரவித்துள்ளார். ரஷ்யாவின் நாடாளுமன்றத் தேர்தல்களைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படலாம் எனக் குறிப்பிட்ட ஜெலன்ஸ்கி, டொனெட்ஸ்கில் உக்ரைன் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள பகுதிகளைக் கைப்பற்றும் நடவடிக்கையில் புட்டின் ஈடுபடுவதாகவும்  குறிப்பிட்டார். ரஷ்யப் படையினரின் பெரும் இழப்புகள் இருந்தபோதிலும், 2026-ஆம் ஆண்டின் […]

உலகம்

கனடா மீது கூடுதல் வரி – பதில் நடவடிக்கையை அறிவிக்கும் ஒட்டாவா

  • August 25, 2026
  • 0 Comments

கனடா மீது ட்ரம்ப் நிர்வாகம் கூடுதல் வரிகளை விதித்துள்ள நிலையில், ஒட்டாவா இன்று பதில் நடவடிக்கையை அறிவிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அமெரிக்காவின் தீர்வைகளுக்கு ஈடாக டொலருக்கு   டொலர் என்ற விகிதத்தில் தீர்வைகளை விதிக்கும் போக்கிலிருந்து ஒட்டாவா விலகி, அதற்குப் பதிலாக கனடிய தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களைப் பாதுகாக்கும் நோக்கில் மேலும் இலக்கு வைக்கப்பட்ட பதிலடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடும்” என்று கனடியப் பிரதமர் மார்க் கார்னி Mark Carney கூறியுள்ள நிலையில் புதிய அறிவிப்புகள் வரவுள்ளளன. கனடிய வாகனங்கள், வாகன […]

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். இலங்கை செய்தி

நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் விஜயம்

  • August 25, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்துக்கு இன்று விஜயம் செய்யும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ். சிறைச்சாலைக்கும் சென்று அங்குள்ள நிலைமைகளைப் பார்வையிடவுள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்குக் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் நடத்தும் நிகழ்வில் கலந்துகொள்ளும் நீதி அமைச்சர், அந்த நிகழ்வு நிறைவுற்றதும் யாழ். சிறைச்சாலையைப் பார்வையிடவுள்ளார். நாட்டில் உள்ள பல சிறைச்சாலைகளில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளையடுத்துப் பலர் உயிரிழந்தனர். இதனையடுத்துச் சகல சிறைச்சாலைகளினதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில், நீதி அமைச்சர் இன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையைப் […]

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியா இலங்கை செய்தி

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணத்துக்கு திகதி நிர்ணயம்

  • August 25, 2026
  • 0 Comments

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவது மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்த […]

உலகம்

H-1B விசா கட்டணத்தை $100,000 டொலருக்கும் அதிகமாக உயர்த்த முன்மொழிவு

  • August 24, 2026
  • 0 Comments

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான புதிய H-1B விசா கட்டணத்தை $100,000 டொலருக்கும் அதிகமாக உயர்த்தும் புதிய முன்மொழிவை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகம் இன்று (24) வெளியிட்டது. கடந்த வருடத்தில் இந்த கட்டண திருத்தம் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அமெரிக்க நீதிமன்றங்கள் அதனை தடுத்திருந்தன. இருப்பினும், இந்த விதிகளை அங்கீகரிக்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு (DHS) உத்தரவிட்டு, அதை நிலைநிறுத்தியுள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கான முன்மொழியப்பட்ட $103,265 கட்டணம், இன்று ஃபெடரல் ரெஜிஸ்டரில் ஆன்லைனில் வெளியிடப்பட்டது மற்றும் […]

இலங்கை

கடல் வெப்பநிலை 01 பாகை செல்சியஸால் அதிகரிப்பு – மழைக்கு வாய்ப்பில்லை

  • August 24, 2026
  • 0 Comments

எல் நினோ நிகழ்வின் காரணமாக இலங்கையைச் சுற்றியுள்ள கடல் வெப்பநிலை மேலும் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 8 மாதங்கள் இலங்கைக்கு மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளன. இதற்கிடையில், பசிபிக் பெருங்கடலின் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில், பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலைகள் இரண்டும் எச்சரிக்கை மட்டத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த எல் நினோ நிகழ்வின் தாக்கத்தால், நாட்டின் பல மாவட்டங்களில் கடுமையான […]

ஐரோப்பா

சியூட்டாவில் இயல்பு நிலை ஸ்தம்பிப்பு – அவசரமாகக் கூடும் அதிகாரிகள்

  • August 24, 2026
  • 0 Comments

சியூட்டாவில் Ceuta  இயல்பு நிலையை மீட்டெடுக்க அதிகாரிகள் போராடி வருகின்ற நிலையில், ஸ்பானியப் பிரதமர் பெட்ரோ சான்செஸ் Pedro Sánchez தேசியப் பாதுகாப்புக் குழுவின் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். நிலைமையை மதிப்பிடுவதற்கும் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதற்கும் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. சியூட்டா மொரோக்கோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் காரணமாக  கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. ஸ்பெயினின் உள்துறை அமைச்சகம் முன்னதாக வந்திறங்கியவர்களின் எண்ணிக்கையை சுமார் 72,000 எனக் குறிப்பிட்டிருந்தது.   அவர்களில் சுமார் 70,000 பேர் மொராக்கோவிற்குத் […]

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியா உலகம் செய்தி

7 வருடங்களுக்கு பிறகு இந்தியா வருகிறார் சீன ஜனாதிபதி

  • August 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெருமளவிலான பிரதிநிதிகளுடன் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு அவர் வருகை தந்தால், அது கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவிற்கு அவர் மேற்கொள்ளும் முதல் விஜயமாக அமைவதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள சுமுகமான மாற்றத்தின் ஒரு முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படும். எதிர்வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் இந்தியா பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்துகிறது. 2020 ஆம் […]