உலகம்

இந்தோனேசியாவில் நச்சுப்புகை தாக்கம் – 1.75 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

இந்தோனேஷியாவின் சுமாத்திரா மற்றும் போர்னியோ தீவுகளில்  பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சுமார் 1.75 இலட்சத்துக்கும்  அதிகமான மக்கள் சுவாச நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 40,000க்கும் மேற்பட்டோர் சிறுவர்கள் மற்றும் பிஞ்சுக் குழந்தைகள் எனவும், இவர்களுக்கு சாதாரண இருமல், மூச்சுக்குழாய் அழற்சி முதல் தீவிர நியூமோனியா வரையிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் காட்டுத்தீயால் உருவாகியுள்ள நச்சுப் புகை இந்தோனேசியாவை மட்டுமன்றி, அண்டை நாடுகளான மலேசியா, சிங்கப்பூர் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளையும் பாதித்துள்ளதுடன், அந்நாடுகளின் காற்றுத் தரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த 54,000க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 64 ஹெலிகொப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜப்பான் தற்காப்புப் படையினரின் உதவியுடன் மேக விதைப்பு நடவடிக்கைகள் மூலம் செயற்கை மழையை ஏற்படுத்தி காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்