உலகம்

வான்பாதுகாப்பு கொள்வனவு தொடர்பில் கிரீஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒப்பந்தம்

கிரீஸ் மற்றும் இஸ்ரேல் இடையே வான்பாதுகாப்பு கொள்வனவு தொடர்பான ஒப்பந்தம் இன்றுறு கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இராணுவ நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்திற்காக சுமார் 3 பில்லியன் யூரோ ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

மேம்பட்ட குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தத்திற்கு, நாட்டின் பாதுகாப்புக் கவுன்சில் ஆரம்பக்கட்ட ஒப்புதல் அளித்துள்ளது.

இதேவேளை 2036-ஆம் ஆண்டுக்குள், “அகில்லஸ் ஷீல்ட்” “Achilles Shield”  எனப்படும் பல அடுக்கு ஏவுகணை எதிர்ப்பு, விமான எதிர்ப்பு மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்பைக் கட்டுவதற்கும், அமெரிக்காவிடமிருந்து 40 F-35 ரக போர் விமானங்கள்,  பிரான்ஸ் மற்றும் இத்தாலியிடமிருந்து போர்க்கப்பல்களையும் கொள்வனவு செய்வதற்கு கிரீஸ் இலக்கு வைத்துள்ளது.

இதற்காக ,   சுமார் 28 பில்லியன் யூரோ செலவழிக்க கிரீஸ் திட்டமிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்