இலங்கை செய்தி

22மீதான மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் நாளை பரிசீலனைக்கு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பரிசீலிப்பதற்காக 5 பேரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் (Bench) நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமயிலான இந்த நீதியரசர்கள் குழாமில், நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கீஹான் குலதுங்க ஆகியோர் அடங்குகின்றனர்.

இந்த மனுக்கள் அனைத்தும் நாளை செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

முன்மொழியப்பட்டுள்ள இந்த அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மற்றும் பல தரப்பினரால் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக நீதித்துறை தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் உட்பட, இந்த 22 ஆவது திருத்தச் சட்டமூலமானது பல சட்ட மற்றும் அரசியல் விவாதங்களை தோற்றுவித்துள்ளது.

இருப்பினும், இந்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்து உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்திற்கு அரசாங்கம் கட்டுப்படும் என அறிவித்துள்ளது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை