சீனாவில் சீரற்ற வானிலை : நிலச்சரிவால் 21 பேர் உயிரிழப்பு
சீனாவின் மேற்கு கான்சு மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, டான்சாங் (Tanchang) கவுண்டியில் உள்ள ஒரு பள்ளத்தாக்கில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அரசுக்குச் சொந்தமான ஒரு வனவியல் பண்ணையில் தற்காலிகத் தொழிலாளர்களாகப் பணியமர்த்தப்பட்ட உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 33 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களில் 11 பேர் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எஞ்சியவர்கள் மண்ணுக்குள் புதையுண்டிருந்த நிலையில் தற்போது உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்போது முடிவடைந்துவிட்டதாக […]













