ஐரோப்பா

குழந்தைகள் ஆபாச படங்களை கொள்வனவு செய்ய முயற்சி – ஐரோப்பிய நாடுகளில் 28 பேர் கைது

குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தை சித்தரிக்கும் பொருட்களை (படங்களை) வாங்கும் நோக்கில் செயற்பட்ட 28 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டார்க் வெப்பில் உள்ள பல மன்றங்களை அணுகுவதற்காக, அந்த ஆண்கள் மொனெரோ என்ற கிரிப்டோகரன்சியைப் பயன்படுத்தி பணம் செலுத்தியதாக நோர்வேயின் தேசிய குற்றப் புலனாய்வு சேவை கூறியுள்ளது.

இந்நிலையில் குறித்த கைது நடவடிக்கையை மேற்கொள்ள 06 நாடுகளுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டதாக நோர்வே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கை ஜூன் மாத தொடக்கத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், 22 முதல் 54 வயதுக்குட்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கைது நடவடிக்கை நோர்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, செக் குடியரசு, போலந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் இடம்பெற்றதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்