ஐரோப்பா

காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஸ்டாக்ஹோமில் மாபெரும் பேரணி

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்திற்கு எதிராக, ஸ்வீடன் தலைநகரான ஸ்டாக்ஹோமில் இன்று 10,000-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.

சுவீடனில் வரும் செப்டம்பர் 13 ஆம் திகதியன்று  பொதுத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் ஸ்வீடன் வாக்காளர்களின் கவலைகளில் காலநிலை மாற்றம் முதன்மையானதாக உள்ளது.

2030-ஆம் ஆண்டுக்குள் போக்குவரத்திலிருந்து வெளியாகும் CO₂ உமிழ்வை 70 சதவீதம் குறைத்தல் மற்றும்,  2045-ஆம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவது உள்ளிட்ட இலக்குகளுக்கு அரசாங்கத்தின் கொள்கை அச்சுறுத்தலாக உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இளைஞர்கள்,  விளையாட்டுக் குழுக்கள், தொழிற்சங்கங்கள், கிராமப்புற சங்கங்கள் மற்றும் உரிமைக் குழுக்களால் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடன் தலைநகரில் நடந்த இந்தப் பேரணியில், அந்நாட்டின் மிகவும் பிரபலமான காலநிலை பிரச்சாரகரான கிரெட்டா துன்பெர்க்கும் கலந்துகொண்டார்.

“காலநிலை பேரழிவைத் தவிர்ப்பதற்கு அறிவியல் என்ன செய்ய வேண்டும் என்று சொல்கிறதோ, அதற்கு நெருக்கமான அரசியலை முன்வைக்கும் எந்தக் கட்சியும் ஸ்வீடனில் இல்லை,” என்று துன்பெர்க் கூறினார்.

“நாம் இப்போது இருப்பது போலவே தொடர்ந்தால், வீழ்ச்சியைக் காண்போம்.  நாம் ஏற்கனவே வீழ்ச்சியைக் காண்கிறோம்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்