உலகம்

போர் பதற்றம் : டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி கடும் சரிவு

  • July 19, 2026
  • 0 Comments

ஈரானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் போர் சூழல் காரணமாக அந்நாட்டின் ரியால் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலருக்கு நிகரான ரியாலின் பெறுமதி நேற்றைய தினம் 1.94 மில்லியனைக் கடந்துள்ளது. ஏறக்குறைய 1.67 சதவீதத்தால் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், டொலரின் பெறுமதி புதிய உச்சத்தை தொட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டொலரைப் போலவே யூரோவின் மதிப்பும் அதிகரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, ஒரு யூரோவின் பெறுதி 1.64 சதவீதத்தால் அதிகரித்து 2.22 மில்லியன் ரியால்களில் வர்த்தகமானது. இதேவேளை இந்த […]

இலங்கை

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

  • July 19, 2026
  • 0 Comments

கொழும்பு – தெஹிவளையில் சற்றுமுன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தெஹிவளை பொதுமயானத்திற்கு அருகில் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

ஐரோப்பா

ஹங்கேரிய அரசியல் அமைப்பில் திரும்புமுனை – ஜனாதிபதி பதவி விலக ஒப்புதல்

  • July 19, 2026
  • 0 Comments

ஹங்கேரிய ஜனாதிபதி தாமஸ் சுலியோக் (Tamás Sulyok) தனது பதவியை இராஜினாமா செய்ய இன்று ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய இன்று நள்ளிரவுடன் அவரது பதவிகாலம் முடிவுக்கு வருகிறது. முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பானின் விசுவாசியாகப் பரவலாகக் கருதப்படும் சுலியோக்கைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக, பிரதமர் பீட்டர் மாக்யாரின் டிசா கட்சி  அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முனைப்பு காட்டடியிருந்தது. இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அவகாசக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

கணினியில் முகப்புத்தகத்தை அணுகுவதில் சிக்கல்

  • July 19, 2026
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் கணனியில் முகப்புத்தகத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் வழியாக ஃபேஸ்புக் தளத்தை அணுகுவது தடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கையடக்க தொலைபேசிகளில் முகப்புத்தக செயலியைப் பயன்படுத்துவதில் எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஐரோப்பா

ஸ்பெயினில் மூன்றாவது முறையாக உச்சம் தொடும் வெப்ப அலை – காட்டுத்தீ அபாயம்

  • July 19, 2026
  • 0 Comments

ஸ்பெயினில் நேற்று முதல் வெப்பநிலை மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. வரும் செவ்வாய்க்கிழமை (22.07) உச்சம் தொடும் எனவும் அந்நாட்டின் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஸ்பெயினில் இந்த கோடைக் காலப்பகுதியில் பதிவாகியுள்ள மூன்றாவது வெப்ப அலையாகும். ஸ்பெயினின் தென்கிழக்குப் பகுதியில் வெப்பநிலையானது 45 பாகை செல்சியஸை தாண்டும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அந்தலூசியா, எப்ரோ பள்ளத்தாக்கு, வடகிழக்கு தாழ்நிலப் பகுதிகள், ஜெனில் படுகை மற்றும் மல்லோர்காவின் உட்பகுதி ஆகிய இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும் எனவும் […]

உலகம்

2027 ஆம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாட்டை குறைக்க இலக்கு

  • July 19, 2026
  • 0 Comments

2027-ஆம் ஆண்டின் இறுதிக்குள் டீசல் பயன்பாட்டைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேஷனல் சிஸ்டம் கண்ட்ரோல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2027-ஆம் ஆண்டு இறுதிக்குள் பேட்டரிகள் மூலம் சுமார் 750 மெகாவாட் மின்சாரத் திறனைப் பெறத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் டீசல் பயன்பாட்டைக் குறைக்க முடியும் என்றும் அந்நிறுவனத்தின் தலைவர் டாக்டர் பிரதீப் பிரியதர்ஷன கூறினார். இது தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர்,   மின்சார உற்பத்திக்கான பேட்டரிகள் ஏற்கனவே மின் அமைப்புடன் […]

உலகம்

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றம்

  • July 19, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் அதிகரித்து வரும் பதற்ற நிலை காரணமாக கச்சா எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்கு அமைய  ப்ரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88.10 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.49 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இதேவேளை, இயற்கை எரிவாயுவின் விலை 2.91 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான் நடத்திய தாக்குதலில் தனது இருவர் கொல்லப்பட்டுள்ள நிலையில்,ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

‘இரு படையினர் பலி’ – ஈரான்மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியது அமெரிக்கா

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்தான்மீது ஈரான் நடத்திய தாக்குதலில் தமது நாட்டை சேர்ந்த இரு படையினர் கொல்லப்பட்டுள்ள நிலையில், ஈரான்மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த மாதம் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் கடந்த வாரம் முறிந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. இது ஒரு முழு அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவின் பேரில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு (ET) இந்த வான்வழித் தாக்குதல்கள் தொடங்கப்பட்டதாக […]

ஐரோப்பா

ஸ்பெயினில் 05ஆவது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ – அணைக்க பெரும் போராட்டம்

  • July 19, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் அரகோன் மற்றும் காஸ்டில்லா-லா ஆகிய பகுதிகளில் காட்டுத்தீ இன்று 05 ஆவது நாளாக பற்றி எரிந்து வருகிறது. ஓரேஸில் சிறிய தீப்பொறியாக பரவிய தீ தற்போது பெருமளவிலான நிலப்பரப்பை ஆக்கிரமித்துள்ளது. சுமார் 15,400 ஹெக்டேர் எரிந்து நாசமாகியுள்ளதகாக தெரிவிக்கப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் லூசியாவின் நுழைவாயில் பகுதியில் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். இருப்பினும் எஞ்சிய பகுதிகளில் தீ வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. தீ வேகமாக பரவி வருவதன் காரணமாக அப்பகுதிகளில் வசித்து வந்த 529 குடியிருப்பாளர்கள் […]

உலகம்

ஜோர்டான் மீது ஏவுகணைத் தாக்குதல் – இரு அமெரிக்க வீரர்கள் பலி

  • July 19, 2026
  • 0 Comments

ஜோர்டான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இரண்டு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் ஒருவர் காணாமல் போயுள்ளார். ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதலில் அந்த இரண்டு வீரர்களும் கொல்லப்பட்டதை, அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு தற்போது உறுதி செய்துள்ளது. மேலும், இந்தத் தாக்குதல்களில் நான்கு அமெரிக்கப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.