ஐரோப்பா

ஹங்கேரிய அரசியல் அமைப்பில் திரும்புமுனை – ஜனாதிபதி பதவி விலக ஒப்புதல்

ஹங்கேரிய ஜனாதிபதி தாமஸ் சுலியோக் (Tamás Sulyok) தனது பதவியை இராஜினாமா செய்ய இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இதற்கமைய இன்று நள்ளிரவுடன் அவரது பதவிகாலம் முடிவுக்கு வருகிறது.

முன்னாள் பிரதமர் விக்டர் ஓர்பானின் விசுவாசியாகப் பரவலாகக் கருதப்படும் சுலியோக்கைப் பதவியிலிருந்து நீக்குவதற்காக, பிரதமர் பீட்டர் மாக்யாரின் டிசா கட்சி  அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டுவர முனைப்பு காட்டடியிருந்தது.

இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள 05 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், குறித்த அவகாசக் காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதனைத் தொடர்ந்து தாமஸ் சுலியோக் புதிய சட்டத்திருத்தத்தில் கையெழுத்திட்டு பதவி விலகுவதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்தத் திருத்தம் “ஹங்கேரிய அரசியலமைப்பு ஜனநாயகத்தில் ஒரு திருப்புமுனையைக்” குறிக்கிறது என்றும், “ஒரு சுதந்திர சமூகத்தின் அடிப்படைக் கொள்கைகள் அரசியல் அதிகாரத்திற்காகக் காலில் போட்டு மிதிக்கப்பட்டுள்ளன” என்றும் சுலியோக் விமர்சித்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்