உலகம்

பச்சை நண்டுகளை உட்கொண்டும், சிறுநீரை குடித்தும் வாழ்ந்த தொழிலதிபர்! பின்னணி என்ன?

  • June 13, 2026
  • 0 Comments

சீனாவின் 40 வயது மதிக்கத்தக்க தொழில் அதிபர் ஒருவர் விடுமுறையை கழிப்பதற்காக பிரபல விடுதிற்கு சென்றிருந்த நிலையில் கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். ஹைனானில் உள்ள செங்மாய் கடற்கரையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில், அவர் நிர்வாணமாகவும் சுயநினைவின்றியும் மிதந்த நிலையில் மீனவர்களால் காப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குவாங்சி ஜுவாங் தன்னாட்சிப் பகுதியைச் சேர்ந்த அந்த தொழிலதிபர், மே 27 அன்று ஹைக்கோ கடற்கரையில் இரவு நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்போது அவரிடம் தொலைபேசியும் […]

இலங்கை செய்தி

இலங்கையில் முதலீடு செய்ய அணிதிரளும் சீன நிறுவனங்கள்!

  • June 13, 2026
  • 0 Comments

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின் (China Harbour Engineering Company – CHEC) தலைவர் BAI YINZHAN உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் “நேரடியான மற்றும் தொலைநோக்குடைய தலைமைத்துவம்” காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதற்கு தமக்கு வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக சைனா ஹார்பர் நிறுவனத்தின் தலைவர் BAI YINZHAN தெரிவித்தார். குறிப்பாக, கொழும்பு துறைமுக […]

இந்தியா செய்தி

தீவிரமடைகிறது ‘எல் நினோ’!

  • June 13, 2026
  • 0 Comments

பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்கு நிலநடுக்கோட்டுப் பகுதியில் ‘எல் நினோ’ காலநிலை சூழல் தற்போது தீவிரமடைந்து வருகின்றது. இது நடப்பு தென்மேற்கு பருவமழை காலத்தில் மேலும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பெருங்கடல் மற்றும் வளிமண்டலம் ஆகிய இரண்டிலும் எல் நினோவிற்கான தெளிவான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளது. இது உலகளாவிய வானிலையிலும், இந்தியாவின் பருவமழைப் பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. எல் நினோ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு […]

இலங்கை

பல்லேகம தேரரின் இரத்த மாதிரியை பெற உத்தரவு!

  • June 13, 2026
  • 0 Comments

பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியை பெற நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை  நேற்று  இடம்பெற்ற நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்கான இரத்த மாதிரியை வழங்க வேண்டும். தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், […]

கருத்து & பகுப்பாய்வு செய்தி

புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி : ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் நடைமுறைக்கு!

  • June 13, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கை மீதான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத் தலைவர் மேக்னஸ் புரூனர், “முதல் முறையாக, எங்களிடம் ஒரு விரிவான ஐரோப்பிய அமைப்பு உள்ளது,” எனக் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அவற்றின் எல்லைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, எல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக […]

இலங்கை செய்தி

இலங்கையில் களமிறங்குகிறது ஐ.நா.குழு!

  • June 13, 2026
  • 0 Comments

சித்திரவதைகளைத் தடுப்பது தொடர்பான ஐ.நா. உபகுழு UN Subcommittee on Prevention of Torture (SPT) ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், மீண்டும் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது. எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை இந்தக் குழு இலங்கையில் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஐ.நா அலுவலகம்தெரிவித்துள்ளது. தடுப்புக்காவலில் உள்ள அல்லது சுதந்திரம் பறிக்கப்படக் கூடிய பிற இடங்களில் உள்ள மக்களுக்கான சீர்திருத்தங்களையும் பாதுகாப்புகளையும் அதிகாரிகள் முறையாகச் செயற்படுத்தியுள்ளார்களா என்பதை மதிப்பிடுவதே […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவுக்கு மரண தணடனை?

  • June 13, 2026
  • 0 Comments

“ உரிய சட்ட அணுகுமுறையின் பிரகாரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, சுரேஷ்ச லே குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனைக்கூட வழங்கலாம். அதனை நாம் எதிர்க்கமாட்டோம். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “சுரேஷ்சலே தடுப்புகாவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார். அவர் குற்றவாளியெனில் மரண தண்டனை விதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் அவர் தற்போது சந்தேகநபர். குற்றவாளியென […]

உலகம் செய்தி

100 துரோகிகளின் சொத்துகளை பறிமுதல் செய்தது ஈரான்!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரான் இஸ்பஹான் மாகாணத்தில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கருதப்படும் நபர்கள் மீது அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. எதிரி நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டுத் துரோகம் இழைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட 100 பேரின் சொத்துக்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். பல்வேறு வழிகளில் நாட்டின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டதாகக் கூறப்படும் இவர்களை அந்தப் பகுதியின் தலைமை நீதிபதி அடையாளம் கண்டு தண்டனை வழங்கியுள்ளார். ஈரான் அரச ஊடகமான IRIB இந்த தகவலை வெளியிட்டுள்ளது. ஈரானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ஹைட்ரஜன் இயந்திரம் மூலம் மின்சாரத்தை வழங்க முயற்சி!

  • June 13, 2026
  • 0 Comments

உலகில் முதல் முறையாக பிரம்மாண்டமான ஹைட்ரஜன் இயந்திரம் மூலம் மின் உற்பத்தியை வழங்கும் முயற்சியில் ஸ்பெயின் ஈடுபட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பம், கார்பன் உமிழ்வுகள் இல்லாமல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளைச் சமநிலைப்படுத்த உதவும் என்று உற்பத்தியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இந்தத் தொழில்நுட்பம் பின்லாந்து எரிசக்தி நிறுவனமான வார்ட்சிலாவால் (Wärtsilä) உருவாக்கப்பட்டு, வடக்கு ஸ்பெயினில் உள்ள அதன் ஆலையில் சோதிக்கப்பட்டுள்ளது. முழுவதுமாக ஹைட்ரஜனில் இயங்கும் இந்த இயந்திரம் , காற்று மற்றும் சூரிய சக்தி போதுமான ஆற்றலை உற்பத்தி செய்யாதபோது […]

உலகம் செய்தி

இறுதி கட்டத்தில் அமைதி ஒப்பந்தம்: உறுதிப்படுத்தியது ஈரான்!

  • June 13, 2026
  • 0 Comments

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாகவும், இதில் ஹார்முஸ் நீரிணை பகுதியை மீண்டும் திறப்பதும் அடங்கும் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் Seyed Abbas Araghchi தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரானிய அரசுத் தொலைக்காட்சியிடம் கருத்து வெளியிட்ட அவர், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார முற்றுகை நீக்கப்படும் என்று குறிப்பிட்டார். அமெரிக்க அதிகாரிகளும் இந்த ஒப்பந்தத்தின் சில விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும், ஈரானுக்கான பொருளாதார நன்மைகள், தெஹ்ரான் தனது […]