சுரேஷ் சலேவுக்கு மரண தணடனை?
“ உரிய சட்ட அணுகுமுறையின் பிரகாரம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு, சுரேஷ்ச லே குற்றவாளியென நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரணதண்டனைக்கூட வழங்கலாம்.
அதனை நாம் எதிர்க்கமாட்டோம். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையையே எதிர்க்கின்றோம்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் அஜித் மானப்பெரும தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,
“சுரேஷ்சலே தடுப்புகாவலில் வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றார்.
அவர் குற்றவாளியெனில் மரண தண்டனை விதித்தால்கூட பரவாயில்லை. ஆனால் அவர் தற்போது சந்தேகநபர். குற்றவாளியென நிரூபிக்கப்படவில்லை.
எனவே, சந்தேக நபரொருவரை நடத்த வேண்டிய விதிமுறை இருக்கின்றது. சட்டம் இருக்கின்றது. அதற்கமைய செயல்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு சுரேஷ் சலே குற்றவாளியானால் மரண தண்டனை வழங்குங்கள்.
இதைவிடுத்து பிரச்சினையை திசை திருப்புவதற்காக சுரேஷ் சலே விவகாரம் பயன்படுத்தப்படுமானால் அதனை நாம் எதிர்க்கின்றோம். சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை எதிர்க்கின்றோம்.
ரணில் விக்கிரமசிங்க மீட்டெடுத்த நாட்டை இவர்கள் மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுசென்றுவிடுவார்களா என்ற அச்சம்தான் எமக்கு உள்ளது. அதை நினைத்துதான் பயப்படுகின்றோம்.” – என்றார் அஜித் மானப்பெரும.




