உலகம்

கியூபாவில் பொருளாதார நெருக்கடி : வறுமையை எதிர்கொள்ள அழைப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு மத்தியில் நாட்டின் பொருளாதாரத்தை வளப்படுத்த  சுற்றுலா, வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் தனியார் வணிகம் போன்ற முக்கியத் துறைகளில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள கியூபா ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள கியூப ஜனாதிபதி தியாஸ்-கானெல் (Díaz-Canel), “நாடு முடங்கிவிடவில்லை. நாடு இந்த முழு சூழ்நிலையையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்கிறது. நாம் செய்யும் அனைத்தையும் எதிரி கவனித்துக் கொண்டிருப்பதால், எல்லாவற்றையும் அவ்வளவு தெளிவாக நம்மால் விளக்க முடியாது,” என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் அமைச்சகங்களின் எண்ணிக்கையைக் […]

உலகம் செய்தி

ஈரானிய பெண்ணை நாடு கடத்தியது அமெரிக்கா!

  • June 13, 2026
  • 0 Comments

ஈரானைச் சேர்ந்த ஒரு ஜனநாயக ஆர்வலரை அமெரிக்க அரசு , மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுக்கு நாடு கடத்தியுள்ளதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அந்த நாட்டில் எந்தவிதமான உறவினர்களோ அல்லது அடிப்படை ஆதரவோ இல்லை என்பதால், இந்த நடவடிக்கை அவருக்கு மிகுந்த ஆபத்தை விளைவிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதைப் போலவே மேலும் இரண்டு ஈரானியப் பெண்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளனர். தஞ்சம் தேடி வந்தவர்களை அவர்களுக்குத் தொடர்பில்லாத ஒரு நாட்டில் கைவிடுவது, இறுதியில் அவர்களைத் […]

ஐரோப்பா செய்தி

பாலஸ்தீன ஆர்வலர்கள் நால்வருக்கு பிரிட்டனில் சிறை தண்டனை!

  • June 13, 2026
  • 0 Comments

இஸ்ரேலை தளமாகக் கொண்ட பாதுகாப்புத் தளவாட நிறுவனத்தின் பிரித்தானிய கிளையில் பாரிய சேதத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் Palestine Action அமைப்பைச் சேர்ந்த நான்கு ஆர்வலர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், Bristol நகருக்கு அருகிலுள்ள Elbit Systems தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் இவர்கள் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டனர். இதனையடுத்து ஷார்லோட் ஹெட் (30), சாமுவேல் கார்னர் (23), லியோனா காமியோ (30) மற்றும் பாத்திமா ரஜ்வானி […]

இலங்கை செய்தி

செம்மணி புதைகுழி: நேரில் களமிறங்கும் நீதி அமைச்சர்!

  • June 13, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பாரபட்சமின்றி நீதி வழங்குவதில் தற்போதைய அரசு மிகவும் அவதானமாகச் செயற்பட்டு வருகின்றது. இது குறித்து நேரில் ஆராய்வதற்காக எதிர்வரும் 17ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார செம்மணிக்கு விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார். “செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் நாம் ஆரம்ப காலம் முதற்கொண்டே மிகவும் ஆழமான கருத்துக்களை முன்வைத்து […]

செய்தி விளையாட்டு

பாலஸ்தீன தலைவருக்கு அமெரிக்கா கதவடைப்பு!

  • June 13, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் நடைபெறும் FIFA உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்கச் சென்ற பாலஸ்தீன கால்பந்து சங்கத் தலைவர் மற்றும் சில நாடுகளின் பிரதிநிதிகளுக்கு Visa மறுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளை ஒன்றிணைக்கும் நிகழ்வாக FIFA தொடர் கருதப்பட்டாலும், அமெரிக்க அரசு சில வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்கத் தயக்கம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் தங்களால் தலையிட முடியாது என்றும், அந்தந்த நாட்டு அரசாங்க விதிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் FIFA தலைவர் Gianni Infantino தெரிவித்துள்ளார். கால்பந்து வீரர்களுக்கும் […]

செய்தி விளையாட்டு

கடைசி நொடியில் காக்கப்பட்ட கனடாவின் கௌரவம்!

  • June 13, 2026
  • 0 Comments

கனடா மற்றும் போஸ்னியா-ஹெர்சகோவினா அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான உலகக்கோப்பை கால்பந்து போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஜோவோ லுகிக் அடித்த கோல் மூலம் போஸ்னியா ஆரம்பத்தில் முன்னிலை பெற்றது. போட்டியை நடத்தும் கனடா அணி பல கோல் வாய்ப்புகளைத் தவறவிட்டாலும், மாற்று வீரராக களமிறங்கிய கைல் லாரின் 78-வது நிமிடத்தில் ஒரு முக்கியமான கோலை அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோல் மூலம் கனடா […]

ஐரோப்பா

சுவிஸ் மக்கள் தொகையை 10 மில்லியனாக வரையறுக்க முன்மொழிவு!

  • June 13, 2026
  • 0 Comments

சுவிட்சர்லாந்து தனது நாட்டு மக்கள் தொகையை 10 மில்லியனாக நிர்ணயிக்கும் சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பை நாளைய தினம் நடத்தவுள்ளது. இந்த திட்டத்தை   வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி ஆதரிக்கிறது. வீட்டுவசதி, பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு “நிலைத்தன்மை முயற்சி” என்று அக்கட்சி விவரித்துள்ளது.. ஏனைய அனைத்து கட்சிகளும் இதனை ஒரு குழப்பகரமான முடிவு என விமர்சித்துள்ளனர். அதேநேரம் இந்த முன்மொழிவானது ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடின உழைப்பால் பெறப்பட்ட உறவுகளைச் சேதப்படுத்தும் […]

ஐரோப்பா

தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக போராட்டம் – UK பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை!

  • June 12, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில்  பாலஸ்தீன அமைப்புக்கு  ஆதரவாக குரல் எழுப்பிய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த குழுவினர் வூல்விச் கிரவுன் நீதிமன்றத்திற்கு வெளியே ஒன்றுக்கூடி போராட்டத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேலைத் தளமாகக் கொண்ட பிரித்தானியாவில் இயங்கிவரும் தொழிற்சாலையொன்றில் கடந்த 2024 ஆம் ஆண்டில்  நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நான்கு ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு  இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாகவே மேற்படி போராட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.      

உலகம்

உலகின் முதல் டிரில்லியனரானார் எலான் மஸ்க்!

  • June 12, 2026
  • 0 Comments

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் உலகின் முதல்  டிரில்லியனர் என்ற பெருமையை தன்வசப்படுத்தியுள்ளார். வால் ஸ்ட்ரீட்டில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் வர்த்தக பங்குகள் உயர்ந்ததை தொடர்ந்து இந்த சாதனையை அடைந்துள்ளார். ஸ்பேஸ்எக்ஸ் பங்குகள் $150 டொலரில் வர்த்தகத்தைத் தொடங்கின.  நாஸ்டாக் அறிமுகத்திற்குப் பிறகு 11 சதவீதம் உயர்ந்த இந்தப் பங்குகள், நிறுவனத்தின் மதிப்பை சுமார் $1.96 டிரில்லியனாக உயர்த்தியுள்ளன. சில நிமிடங்களுக்குள், பங்கின் விலை 20 சதவீதம் உயர்ந்து $164  ஆனது. இது, வால் ஸ்ட்ரீட்டின் மிகப்பெரிய நிறுவனங்களின் […]

உலகம்

டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு -10 பேர் படுகாயம்!!

  • June 12, 2026
  • 0 Comments

டெக்சாஸின் மிட்லாண்ட் நகரில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கட்டிடம் ஒன்றுக்குள் பதுங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார், பாதுகாப்பு வளையத்தை அமைத்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதேநேரம் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.