எரிபொருள் விலை திருத்தியமைக்கப்படுமா? அமைச்சர் விளக்கம்
உலக சந்தையில் எரிபொருள் விலைகள் வீழ்ச்சிடையந்துள்ளபோதிலும் அதற்கு ஏற்ப உள்நாட்டில் எரிபொருள் விலையை குறைக்க முடியாது என தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலையை விளக்குவதற்காக, இன்று (17) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் பேசியபோது அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டில் தற்போது பயன்படுத்தப்படும் எரிபொருள், முன்னர் அதிக விலைக்கு வாங்கப்பட்டதால், அந்த விலையில் […]













