அரசியல் இலங்கை செய்தி

புதிய அரசமைப்பு எங்கே? NPP அரசு மௌனம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் நாடாளுமன்றத்தில்.....

புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மௌனம் காப்பது ஏன் என்று ஐக்கிய மக்கள் சக்தி SJP கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா Ajith P Perera கூறியவை வருமாறு ,

“ பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு, புதிய சட்டம் கொண்டுவரப்படும் என இந்த அரசாங்கம் கூறினாலும், அது நடக்குமா என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை.

பயங்கரவாதத்தை தடுப்பதற்குரிய புதிய சட்ட ஏற்பாடு அவசியம். ஆனால் தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டம் தொடர்பில் கடும் விமர்சனங்கள் உள்ளது.

புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் எனக் கூறியே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் அது பற்றி தற்போது கதைக்கப்படுவதில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனவும் கூறினர். அதற்குரிய ஏற்பாடும் இல்லை.

உயர்நீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள பதவி வெற்றிடங்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்பட வேண்டும். இதற்குரிய ஏற்பாட்டை அரசாங்கம் தாமதப்படுத்துவது ஜனநாயக விரோதச் செயலாகும்.” – என்றார் அஜித் பி பெரேரா.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை