ஈரான்மீது தாக்குதல் – ட்ரம்பின் எச்சரிக்கையால் மீண்டும் பரபரப்பு
ஈரானுடன் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதியானது அல்ல என்றும் , ஈரான் முறையாகச் செயல்படாவிட்டால் மீண்டும் அந்நாட்டின் மீது குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸில் நடைபெறும் மாநாட்டில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே ட்ரம்ப் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
” இது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டுமே. இது எனக்குப் பிடிக்கவில்லை என்றால், நாங்கள் மீண்டும் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவோம். அவர்கள் தலைகளில் குண்டுகளை வீசவும் முற்படுவோம்.
இது எனக்குப் பிடிக்காவிட்டாலோ அல்லது அவர்கள் ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டாலோ, நாங்கள் உடனடியாக அவர்களின் தலைகளுக்கு நேராக மீண்டும் குண்டுகளை வீசுவோம், சரியா?” எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய சூழலில் ஈரானுக்கு எவ்வித பொருளாதாரத் தடைகளிலிருந்தும் விலக்கு அளிக்கப்படவில்லை என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த உடன்படிக்கை உலகளாவிய பொருளாதாரச் சந்தைக்கு பெரும் நன்மையைத் தரும் என்றும், இது இல்லையெனில் உலகம் மிகப்பெரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





