சிறுவர்கள் பயணித்த பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல் – உக்ரைன் மீது பழி
ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் சிறுவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
பெலாரஸைச் சேர்ந்த சிறுவர் கால்பந்து அணியை ஏற்றிச் சென்ற பேருந்தின் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து குழந்தைகள் உட்பட ஏழு பேர் காயமடைந்துள்ளதாக ரஷ்யாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.
பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் இந்தத் தாக்குதலை “பொதுமக்களுக்கு எதிரான மற்றொரு பயங்கரவாதச் செயல்” என்று வர்ணித்ததுடன், கீவ்விடம் இருந்து “விரிவான விளக்கங்களை” கோரியுள்ளது.
எவ்வாறாயினும் ரஷ்யாவின் குற்றச்சாட்டுகளை உக்ரைன் நிராகரித்துள்ளது.





