ஐரோப்பா

ருமேனியாவை ஊடுருவிய மற்றொரு ட்ரோன் விமானம் – சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறிவிப்பு

உக்ரைன் எல்லையருகே, மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதியில், தேசிய வான்வெளியை மீறிப் பறந்த இரண்டாவது ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ருமேனியா  இன்று அறிவித்துள்ளது.

முதலில் விழுந்த ஆளில்லா விமானம் ரஷ்யாவினுடையதாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரண்டாவது ஆளில்லா விமானம், டானூப் டெல்டாவில்  (Danube Delta) உள்ள ஸ்ஃபான்டு ஜார்ஜேவிற்கு மேற்கே 10 கி.மீ (6 மைல்) தொலைவில்,  இன்று காலை 08.30 மணியளவில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காலை 8:22 மணிக்கு ரேடார் மூலம் இந்த வான்வெளி மீறல் கண்டறியப்பட்டதாகவும், இரண்டு F-16 ரக போர் விமானங்கள் விரைந்து அனுப்பப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனுடன் 650 கி.மீ (400 மைல்) நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ருமேனியா, 2022-ல் உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு, அடிக்கடி ட்ரோன் ஊடுருவல்களை எதிர்கொண்டு வருகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்