ஈரான் அணி மீதான பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த அமெரிக்கா மறுப்பு
உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்பதற்காக லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் சீட்டில் நகரங்களுக்கு வந்து செல்லும் ஈரான் கால்பந்து அணியினர் மீதான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தாது என அறியமுடிகின்றது. அமெரிக்காவின் உலகக் கோப்பைக்கான உயர் அதிகாரி ஒருவர் இந்த தகவலை உறுதிப்படுத்தினார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச கால்பந்து கூட்டமைப்பிடம் (FIFA) முறைப்பாடு அளிக்கப் போவதாக ஈரான் அணி எச்சரித்த போதிலும், அமெரிக்கா தன் முடிவில் உறுதியாக உள்ளது. […]













