ஆசிய நாடுகளின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்குள் சீனக் கப்பல்கள் அத்துமீறல்
தைவானின் கிழக்குக் கடல் பகுதியில் சீனக் கப்பல்களின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளமை குறித்து அந்நாட்டின் ஜனாதிபதி வில்லியம் லாய் ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்டை நாடுகளுக்கு சீனாவே மிகப்பெரிய அச்சுறுத்தலையும், ஆபத்தையும் ஏற்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்ட அமலாக்கம் என்ற போர்வையில், ஜப்பான், தைவான் மற்றும் பிலிப்பைன்ஸின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலங்களுக்குள் அவர்கள் தன்னிச்சையாக நுழைவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜப்பான்-பிலிப்பைன்ஸ் கடல் எல்லை நிர்ணயப் பேச்சுவார்த்தைகள் தொடர்பாக லாய் நிர்வாகத்தை தைவானின் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
தற்போதைய அரசாங்கம் இது தொடர்பாக மென்மையான கொள்கையைப் பின்பற்றுவதாகவும், இது தைவானின் இறையாண்மை மற்றும் நலன்களுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.




