ஸ்டாமருக்கு உட்கட்சியிலேயே வலுக்கும் எதிர்ப்பு
பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம் இப்போது அதிகாரம் இல்லை என்றும், 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தொழிலாளர் கட்சிப் பிரமுகர் சார்லஸ் ஃபால்கனர் (Charles Falconer) கூறுகிறார்.
ஸ்டார்மர் அதிகாரத்தை இழந்துவிட்டார் என்றும், கிரேட்டர் மென்செஸ்டர் மேயர் ஆண்டி பர்ன்ஹாம் பொறுப்பேற்பார் என்று பலர் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் பர்ன்ஹாமின் (Burnham) மகத்தான வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து ஸ்டாமர் பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்துள்ளது.
முன்னதாக, தான் பதவி விலகப் போவதில்லை என்றும், எந்தவொரு தலைமைப் பதவிக்கான சவாலையும் எதிர்கொள்வேன் என்றும் சர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்திருந்தார்.
இருப்பினும் மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலைத் தொடர்ந்து தனது எதிர்காலத்தை பற்றி ஆலோசிப்பதற்காக இந்த வார இறுதியை எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.





