அமெரிக்கா, ஈரானுக்கிடையில் சுவிட்சர்லாந்தில் நாளை உயர்மட்ட பேச்சு
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கிடையிலான பேச்சுவார்த்தை நாளை (21) சுவிட்சர்லாந்தின் Burgenstock நகரில் நடைபெறவுள்ளதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அமைதி முயற்சியில் பாகிஸ்தான் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாகச் செயல்பட்டு, இருநாடுகளுக்கும் இடையிலான 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேம்படுத்த முயல்கின்றன.
ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் ராணுவம் எச்சரித்ததைத் தொடர்ந்து, பிராந்திய பதற்றத்தைத் தணிக்க இந்த சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னதாக, லெபனான் மீதான இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் காரணமாக அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் பங்கேற்கவிருந்த கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன.
தற்போது பாகிஸ்தானின் முன்னெடுப்பில் மீண்டும் தொடங்கவுள்ள இந்த பேச்சுவார்த்தை, மத்திய கிழக்கில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.




