லெபனான் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களை நிறுத்த நெதன்யாகு உத்தரவு
தெற்கு லெபனான் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டார்.
இஸ்ரேலிய ஊடகங்களின்படி, பிரதமர் நெதன்யாகுவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரும் அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவை எடுத்தனர்.
இதற்கிடையில், ஹிஸ்புல்லா போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.
ஹிஸ்புல்லா தொடர்ந்து போர் நிறுத்தத்தை மீறி வருவதாகவும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலிய போர் விமானங்கள் தெற்கு லெபனானில் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு உறுதியளிப்பதாகவும், ஆனால் லெபனானை ஆக்கிரமிப்பதற்கான இஸ்ரேலிய முயற்சிகளைத் தீவிரமாக எதிர்ப்பதாகவும் ஹிஸ்புல்லா முன்னதாகக் கூறியிருந்தது.
தெற்கு லெபனானில் உள்ள நபாதியாவை நோக்கி முன்னேறி வந்த இஸ்ரேலியப் படைகளைத் தாக்கியதாக ஹிஸ்புல்லா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவர்கள் வெள்ளிக்கிழமை முதல் புதிய போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.
ஆனால் இஸ்ரேல் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்க ஹிஸ்புல்லா முழுமையாகத் தயாராக உள்ளது.




