பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்

  • June 27, 2026
  • 0 Comments

பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது. பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது. அண்டை நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை குவைத் வழங்கியுள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குவைத்த வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் […]

பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல்மீது தாக்குதல்

  • June 27, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணித்த ஒரு எண்ணெய் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணை போன்ற ஒரு பொருளால் தாக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டிஷ் கடல்சார் வர்த்தக அமைப்பு United Kingdom Maritime Trade Operations (UKMTO) வெளியிட்டுள்ள செய்தியின்படி, தாக்குதலில் கப்பலின் மேல்தளம் சேதமடைந்தாலும் அதிர்ஷ்டவசமாக ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். இந்த விபத்தினால் கடலில் எவ்வித சுற்றுச்சூழல் பாதிப்பும் இதுவரை ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இந்த அசம்பாவிதம் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணையைத் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் கடும் வெப்பம் : நீரை சேமித்து வைக்க அறிவுறுத்து

  • June 27, 2026
  • 0 Comments

மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய வெப்பநிலை தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளால் ஜெர்மனியில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் வாழும் மக்கள் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெப்பநிலை 36°C ஆக இருக்கும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42°C வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மனிதனால் […]

பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அரசியல் இலங்கை செய்தி

சூழ்ச்சிகள் அம்பலம்: விசாரணை வேட்டை தீவிரம்

  • June 27, 2026
  • 0 Comments

குற்ற ராஜ்ஜியத்தை கட்டியெழுப்புவதற்காக கடந்தகால ஆட்சியாளர்கள் செய்த சூழ்ச்சிகள் அம்பலமாகத் தொடங்கியுள்ளன. இந்த அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாதாள குழு உறுப்பினர்களிடமிருந்து முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் மகன் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “குற்ற […]

ஐரோப்பா

வெப்ப அலை : சுவிட்ஸர்லாந்தில் வேகமாக உருகும் பனிப்பாறை

  • June 27, 2026
  • 0 Comments

ஐரோப்பாவைத் தாக்கிவரும் வெப்ப அலை காரணமாக, சுவிட்ஸர்லாந்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகும் வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டின் பனிப்பாறை கண்காணிப்பு அமைப்பின் (GLAMOS) தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த குளிர்காலத்தில்   குவிக்கப்பட்ட பனியும் பனிக்கட்டியும் ஜூன் 22-ஆம் திகதிக்குள் முழுமையாக உருகிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜுன் முதல் அக்டோபர் வரையிலான காலப்பகுதியில் வெப்பநிலை இதே அளவில் தொடருமாயின் சுவிஸ் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள பனிப்பாறைகளின் அளவு சுருங்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிகழ்வு கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுன் […]

ஐரோப்பா

பிரான்ஸ் – புர்கினோ பசோ உறவில் விரிசல் : தூதரக உறவு முறிவு

  • June 27, 2026
  • 0 Comments

பிரான்ஸ் உடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக புர்கினோ பசோ நேற்று அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பிரான்ஸ் இன்று அறிவித்துள்ளது. பாதுகாப்பு, இறையாண்மை வெளிநாடு தலையீடுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் விரிசலடைந்து வந்த நிலையில் தற்போது உறவை முறித்துக் கொண்டதாக புர்கினோ பசோ அறிவித்துள்ளது, புர்கினா பாசோவின் தகவல் தொடர்பு அமைச்சர் கில்பர்ட் உட்ராகோ (Gilbert ⁠Ouedraogo) இதனை  உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரான்ஸ் “நாசகார வலையமைப்புகளையும்” […]

ஐரோப்பா

நீண்ட இடைவெளிக்குப் பின் இங்கிலாந்திற்கு வருகை தரும் ஹரி, மேகன் தம்பதியினர்

  • June 27, 2026
  • 0 Comments

சசெக்ஸ் கோமகனும் கோமகியும், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லில்லிபெட்டுடன், அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின்போது அரச இல்லத்தில் தங்குவதற்கான அழைப்பை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 2022-ல் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்குப் பிறகு, ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் மேற்கொள்ளும் முதல் பிரித்தானிய விஜயம் இதுவாகும். மேலும், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மன்னர் சார்லஸ் தனது பேரக்குழந்தைகளைப் பார்ப்பதும் இதுவே முதல் முறையாகும். ஒன்பது மாதங்களாகப் பார்க்காத […]

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தியா செய்தி தமிழ்நாடு

திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது மதிமுக

  • June 27, 2026
  • 0 Comments

திமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகுவதற்கு மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதிமுகவின் 32 ஆவது பொதுக்குழு, கட்சியின் அவைத் தலைவர் ஆ.அர்ஜூனராஜ் தலைமையில் சென்னை அண்ணா நகர், விஜய்ஸ்ரீ மகாலில் இன்று நடைபெற்றது. இதில், கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரை ஆற்றினார். பொருளாளர் மு.செந்திலதிபன், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., துணைப் பொதுச்செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ரொஹையா, மு.பூமிநாதன், சு.ஜீவன், சி.கிருஷ்ணன், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பொதுக்குழுவில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. […]

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார். உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

  • June 27, 2026
  • 0 Comments

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது. இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் […]

"இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்" அரசியல் இலங்கை செய்தி

‘ஹிட்லர்போல் ரகசிய ராணுவ குழுக்களை வைத்திருந்த இலங்கை ஆட்சியாளர்கள்’

  • June 27, 2026
  • 0 Comments

“அரசியலில் அநாதையாக்கப்பட்டவர்களே சுரேஷ் சலேயின் கைதை அரசியல் பழிவாங்கல் எனக் கூறுகின்றனர். இது சட்டப்பூர்வமான ஒரு கைதாகும்” என்று பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார். “இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லருக்கு எஸ்.எஸ். (SS) என ஒரு ராணுவ பிரிவு இருந்தது. இங்கு கடந்த ஆட்சியாளர்கள் இதுபோன்று இராணுவம் மற்றும் சட்டவிரோத குழுக்களை வைத்திருந்தனர்” எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய பிரதி அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “தேசிய மக்கள் சக்தி […]