ஈரான் ட்ரோன் தாக்குதல்: குவைத் கடும் கண்டனம்
பஹ்ரைன் நாட்டின்மீது ஈரான் நடத்தியதாகக் கூறப்படும் ட்ரோன் தாக்குதல்களை குவைத் வன்மையாகக் கண்டித்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த சர்வதேச அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இத்தகைய செயல்கள் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக குவைத் கவலை வெளியிட்டுள்ளது.
அண்டை நாட்டின் இறைமையையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தனது முழுமையான ஆதரவை குவைத் வழங்கியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கத்திற்கு இத்தாக்குதல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக குவைத்த வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




