ஐரோப்பா

பிரான்ஸ் – புர்கினோ பசோ உறவில் விரிசல் : தூதரக உறவு முறிவு

பிரான்ஸ் உடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக புர்கினோ பசோ நேற்று அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து பதிலடி நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக பிரான்ஸ் இன்று அறிவித்துள்ளது.

பாதுகாப்பு, இறையாண்மை வெளிநாடு தலையீடுகள் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் விரிசலடைந்து வந்த நிலையில் தற்போது உறவை முறித்துக் கொண்டதாக புர்கினோ பசோ அறிவித்துள்ளது,

புர்கினா பாசோவின் தகவல் தொடர்பு அமைச்சர் கில்பர்ட் உட்ராகோ (Gilbert ⁠Ouedraogo) இதனை  உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரான்ஸ் “நாசகார வலையமைப்புகளையும்” “பயங்கரவாதிகளையும்” ஆதரிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

எவ்வாறியினும் இந்த குற்றச்சாட்டுகளை பிரான்ஸ் மறுத்துள்ளது.

மேலும் புரிகினோ பசோவில் உள்ள பிரெஞ்சு குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் பிரான்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்