ஐரோப்பா

ஜெர்மனியில் கடும் வெப்பம் : நீரை சேமித்து வைக்க அறிவுறுத்து

மேற்கு ஐரோப்பாவை உலுக்கிய வெப்பநிலை தற்போது கிழக்கு நோக்கி நகர்ந்துள்ளால் ஜெர்மனியில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இன்றைய தினம் 40 டிகிரி செல்சியஸுக்கும் (104 டிகிரி ஃபாரன்ஹீட்) அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெர்மனியில் வாழும் மக்கள் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வெப்பநிலை 36°C ஆக இருக்கும் என்றும், சில இடங்களில் அதிகபட்சமாக 42°C வரை உயரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நீரேற்றத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மனிதனால் உருவாக்கப்பட்ட காலநிலை மாற்றத்தினாலேயே இந்த வெப்ப அலை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த காலநிலை மாற்றத்தால், இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இந்த வார இரவு நேர வெப்பநிலை 100 மடங்கு அதிகமாக இருப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்