உலகம் செய்தி

சர்வதேச சட்டத்தை மீறுகிறது அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு

கடந்த ஒரு வருடத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இரண்டு முறை ஈரான் மீது தாக்குதல் நடத்தியுள்ளன எனவும் Ghadir Nezami சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரான் நாட்டின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா நேற்று நடத்திய தாக்குதல்களை ஈரான் வெளிவிவகார அமைச்சு கடுமையாகக் கண்டித்துள்ளது.

இந்த ராணுவ நடவடிக்கைகள் சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளையும் மீறுவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

தனது பாதுகாப்பு நிலைகள் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக அமெரிக்க இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.

அண்டை நாடுகள் தங்கள் நிலப்பரப்பை இத்தகைய பகைமை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்றும் ஈரான் அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்த மோதல் போக்கு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி