யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வாந்தி எடுத்த சிறுமி ஒருவர் நேற்று (15) பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எட்டு வயதுடைய முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த சிறுமிக்கு கடந்த 13ஆம் திகதி வயிற்றுவலியுடன் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனையெடுத்து தனியார் வைத்தியசாலை ஒன்றில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அதன் பின்னர், நேற்று அதிகாலை ஒரு மணியளவில் மீண்டும் சிறுமிக்கு வயிற்றுவலி ஏற்பட்டதுடன் வாந்தி எடுத்துள்ளார். நிலைமை மோசமடையவே, அதிகாலை 4:30 மணியளவில் […]













