யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது: ஈரான் திட்டவட்டம்!
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த போதிலும், பாகிஸ்தானை மத்தியஸ்தராகக் கொண்டு இரு நாடுகளும் தொடர்ந்து கருத்துக்களைப் பரிமாற்றிவருகின்றன.
ஈரான் தரப்பில் இருந்தும் மேற்படி தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல ஈரானின் அணுசக்தித் திட்டமானது முற்றிலும் அமைதி வழியிலானது என ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
அணு ஆயுதக் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க ஈரான் தயாராக இருந்தாலும் தனது உள்நாட்டுத் தேவைக்கேற்ப யுரேனியம் செறிவூட்டும் உரிமையை விட்டுக்கொடுக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக ஆலோசனைகளை மேற்கொள்ள பாகிஸ்தான் குழுவொன்று இன்று ஈரான் செல்கின்றது எனவும் தெரியவருகின்றது.




